பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"சகம் 1725 ருத்ரோத்காரி வருஷம் மார்க்கசீரிஷ அமாவாசைக்குச் சரியான கி.பி. 1803 டிசம்பர் 13உ'

என்றும் அறியலாயிற்று. இதனான் கல்வெட்டினும் தமிழ்ச் சுவடி முந்தியதாகலா என்று கருதுவதற்கிடம் தந்தது. ==

இந்நிலையில் மராத்தியக் கல்வெட்டின் தமிழாக்கமாகிய போ. வ. ச வையும், மராத்தியர் வரலாறு கூறும் சுவடியையும் ஒப்பீடு செய்து வரலாற் றாராய்ச்சிக் குறிப்புக்களுடன் தமிழ்ச் சுவடியைப் பதிப்பிக்கலாம் என்ற முடி வுக்கு வந்து, புலக்குழுக் கூட்டத்திலும் ஒப்புதல் பெற்று. இப்பணி மேற் கொள்ளப் பெற்றது. -

இதுகாறும் நடந்தேறிய மெக்கன்சி சுவடிகளின் தொகுப்பு ஆய்வுப் பணிபற்றிச் சிறிது கூறுவது இங்குப் பொருத்தமாகலாம்.

மெக்கன்சி தொகுத்த சுவடிகளை அவர் மனைவியிடமிருந்து விலைக்குப் பெற்ற பின்னர்த் தென்னிந்தியப் பகுதியைச் சேர்ந்த சுவடிகள் கி.பி. 1828 செப்டம்பர்த் திங்களில் சென்னைக் கல்லூரி நூலகத்துக்குக் கொண்டு வரப் பட்டன. பின்னர் வில்லியம் டெய்லர் என்பார் இவற்றை ஆய்வு செய்வதற்கு 10-5-1837இல் நியமிக்கப்பட்டார். அவர் மெக்கன்சி சுவடிகளை ஆய்ந்து 'தமிழ் மொழியிலுள்ள கீழ்த்திசை நாடுகளின் வரலாற்றுச் சுவடிகள்' என்ற பெயரில் இரு நூல்களை வெளியிட்டார். பின்னர் இத் தொகுதிகள் சென்னைக் கல்விச் சங்கத் துக்கு மாற்றப்பட்டன. அந்நாளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் இங்கிலாந்து அலுவலகத்தில் கிடந்த சுவடிகளைப் பிரெளன் என்பார் கண்டு, சுருக்கமான பட்டியல் தயாரித்துச் சென்னைக் கல்விச் சங்கத்துக்கு 1844 இல் கொண்டுவரச் செய்தார். சென்னைக் கல்விச் சங்கம் உரிய கவனம் செலுத்தாமையால் அவை சென்னைக் கல்லூரி நூலகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அங்கு வர்ல்டர் எலியட், டெய்லர் என்பார் அட்டவணை தொகுக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவை கல்வித்துறை இயக்குநர் அலுவலகக் கிடங்கில் வைக்கப்பட்டன. எனினும் அவை சீரழிந்து கிடந்தமையின் 6-2-1869 இல் தொகுப்புக்களை அழியாது காக்கும் வழிமுறைகளை ஆய்தற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது சென்னை மாநிலக் கல்லூரியின் வடமொழிப் பேராசிரியர் மெக்கன்சியின் தொகுப் புக்களுக்குப் பொறுப்பாளராக நியமனம் செய்யப் பெற்றார். ஆகவே, இத் தொகுப்புக்கள் புதிய மாநிலக் கல்லூரிக் கட்டடத்துக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் 1895 இல் செயின்ட் ஜியார்ஜ் கோட்டையில் ஒரு சிறிய அறைக்கும்,

3. இராசேந்திரன், பக்கம் 48. அடிக்குறிப்பு 58.

4. Oriental Historical Manuscripts in the Tamil Language, Translated with A nnotations by William Taylor, Two Volumes, 1835.