பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

முதலிய ஒன்பான் மணிகளைப் பற்றிய இலக்கணங்களை நன்கு அறிந்திருந்தனர். அவை பற்றிய நூல்களும் அக்காலத்தில் இருந்தன. கன்னார், செம்பு கொட்டிகள், தச்சர், மரத் தொழிலாளர், கப்பல் கட்டுவோர், துணி துவைப்பவர், தோலைக் கொண்டு பல தொழில் செய்பவர், நெட்டித் தொழிலாளர், முத்துக் கோப்பவர், சங்கு முதலியவற்றால் வளையல் செய்பவர், பலவகைப்பட்ட இசைக் கருவிகள் செய்பவர், ஓவியம் தீட்டுவோர், சிற்பியர் முதலிய பலதிறப்பட்ட தொழிலாளரும் சங்க காலத்தில் வாழ்ந்தனர்.

வாணிகம்

பிளைநி, தாலமி, பெரிப்ளுஸ் ஆகியோர் வரைந்துள்ள குறிப்புக்களும், சங்கநூற் குறிப்புகளும் சங்ககாலத்துக் கடல் வாணிகம் சிறப்புற நடந்து வந்ததைக் குறிக்கின்றன. பழந்தமிழ் வணிகர் மேல்நாடுகளுடனும் கீழ் நாடுகளுடனும் சிறந்த முறையில் கடல் வாணிகம் செய்து வந்தனர். தமிழகத்து அரிசி, மயில், மிளகு, முத்து முதலியன வெளிநாடுகட்கு ஏற்றுமதியாயின. அயல் நாடுகளிலிருந்து பவளம், மணப்பொருட்கள், பலவகைப் பொறிகள், குடிவகைகள் என்பன தமிழகத்தில் இறக்கு மதியாயின. தமிழகத்துத் துறைமுகங்களான தொண்டி, முசிரி, கொற்கை, காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் அராபியர், கிரேக்கர், உரோமர், சீனர் முதலியோர் தங்கி வாணிகம் செய்தனர்.

தமிழகத்தில் உள்நாட்டு வாணிகமும் சிறப்புற நடந்தது. வணிகர்கள் எருது, கோவேறு கழுதை இவற்றின்மேல் பண்டப் பொதிகளை ஏற்றிக்கொண்டு கூட்டம் கூட்டமாய் ஊரூராகச்