பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 அணில் என்ற சொல்லுக்கு வந்து அதிலிருந்து 'அ' விற்குச் செல்லவேண்டும். அணில் படத்தைக் காட்டி அதன்ம்ே எழுதியுள்ள அணில் என்ற சொல்லக் கூறி அ " என்ற எழுத்தைக் கற்பிக்கலாம். இம்முறை குழந்தைகட்குச் சுவையானது. மேலும் குழங்தை உளநூலுக்கும் ஏற்றது. இந்த முறையை தமிழ் நாட்டு மாண்டிசரி என்று சொல்லக் கூடிய ஒளவையார் சிங்தித்துள்ளார் எனக்கருத இடமுண்டு. இக்கால நெடுங்கணக்கட்டையில் படமும் அகன் கீழ் அக்கப் படத்தின் பெயரும் இருக்கும். பெயரிலிருந்து எழுத்தைக் கற்பிக்கும் சொல் முறைப்பாட அட்டை அ.து. ஆல்ை ஒளவையோ வாக்கிய முறைப்பாட அட்டை இரண்டு செய்து கொடுத்துள்ளார். அவை ஆத்தி குடி, கொன்றைவேந்தண் ஆகும். அவை நெடுங்கணக்கு எழுத்துக் களே முதலில் அமைத்துச் செய்யப்பட்டுள்ளன. அறஞ் செயவிரும்பு-'அ'. ஆறுவது சினம் 'ஆ' என்ற வாக்கியத்தி லிருந்து எழுத்திற்குப் போகும் முறை ஒளவையால் அன்றே கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. அறஞ்செய விரும்பு ' என்பது செய்யுள் நடையில் உள்ளதே. இவ்வளவு கடினமாக இருக்கலாமா ? என்று கேட்கலாம். கோமி முட்டையிடும் என்பதை இன்று எப் படி எளிய வாக்கியமாகக் கொள்கிருேமோ அப்படியே உரைநடையின்றிச் செய்யுளே இருங்த அங்தக் காலத்தில் அது எளிய வாக்கியமாகக் கொள்ளப் பட்டது. அத்தகைய உயர்ந்த தரத்தில் மொழியிருந்த காலம் அது. இன்று சிறுவர் கல்விக்குப் பாடுபட்டுள்ள இத்தாலி காட்டு மாண் டிசரி அம்மையாரைப் போன்று அன்று சிறுவர் கல்விக்கு ஒளவையார் எவ்வளவோ பாடுபட்டுள்ளார். கல்வி ஒழுக்கம் என்ற நூலேக்கூட இவர் இயற்றியதாகத் தெரிகின்றது. கல்வழி என்ற நூலில் பாடியுள்ள கடவுள் 181 வாழ்க்கைக்கூடச் சிறுவனே இறைவன் முன் கின்று வேண் டிக்கொள்வதைப் போலவே அவன் மொழியில் அவன் உண்டு கவைத்த கின் பண்டங்களேக்கூறி, பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை தாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ யெனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா என்ற பாடலை இயற்றியுள்ளார். அவருக்குப் பின் வந்த புலவர்களும் சிறுவர்க்கேற்ற நூலில் கருத்தைச் செலுத்தி உலகரீதி, வெற்றிவேற்கை, கன்னெறி, நீதிநெறி விளக்கம், திே வெண்பா முதலியவற்றை இயற்றிச் சென்றுள்ளனர். 8. ஆசிரியர் கற்பிக்கும் முறை ஆசிரியர் பாடம் கற்பிக்கு முன் பாடத்தைப் பற்றிய தயாரிப்பைச் சிறப்பாகச் செய்துகொள்ள வேண்டும் என்று பாடத்தயாரிப்பின் அவசியத்தை வலியுறுத்துகின்றனர். முன்பும் இப்படித்தான் பாடத் தயாரிப்பிற்குப்பின் பாடம் போதிக்கப்பட்டது. எகைக் கற்பிக்க வேண்டுமோ அதை முன் கூட்டியே உள் ளக்கில் அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உரைக்கப்படும் பொருள் உள்ளத் தமைத்து'என நன் னுால் நூற்பா உணர்த்துகின்றது. மான வன் உள்ளத்திற்கேற்பப் போதிக்கவேண்டும் ; அவன் கிலேமையறிந்து போதிக்க வேண்டும் : திணித்தல் முறை கூடாது என்று இக்காலப் போதன முறை கூறுகின்றது. அதையே கொள்வோன் கொள் வகையறிந்து அவன் உளங் கொள'... நூல் கொடுத்தல் என்று நன் னுாலும் வற்புறுத்து கின்றது. மேலும் ஆசிரியருக்குத் தான் சொல்லிக்கொடுக்கப் போகும் பாடத்தில்தெளிவும் திறமையும் இருக்க வேண்டும் என்று இக்காலப்போதன முறை வல்லுநர்கள் கூறுவதைக்