பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

வல்லிக்கண்ணன்


நடைபழக்கும் பெருமை கணையாழியைச் சாரும். தற்சமயம் ஏற்பட்டுள்ள தொய்வினை நீக்கி, கணையாழி வெறும் ‘பிராமணப் பொட்டைப் புலம்பல்‘ மட்டும் அல்ல. சகல தரப்பு அறிவுலக வாசகர்களுக்கும் பொறுப்பு என்று சொல்லக்கூடிய பொறுப்பு கணையாழிக்கு உண்டு— மேட்டுப் பாளையம் ஜெயச்சந்திரன்.”

கணையாழியில் வாசகர்கள் கடிதம் எப்பவுமே சுவாரஸ்யமான அம்சமாகும். அந்தப் பகுதியில் தென்படுகிற அபிப்பிராய சுதந்திரம் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தரமான வாசகர்கள் தங்கள் சிந்தனைகளை தாராளமாகப் பரிமாறிக் கொள்கிறார்கள். எனவே இலக்கியம், சமூகம், அரசியல் முதலிய பல்வேறு விஷயங்கள் பற்றியும் சூடான, சுவையான, அறிவார்ந்த அபிப்பிராயங்களையும், சர்ச்சைகளையும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது. கடிதங்கள் பெரும்பாலும் விரிவாகவே எழுதப்படுகின்றன.

கணையாழியில் அவ்வப்போது சில தனிப்பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை ‘இன்ட்ரஸ்டிங் அன்ட் இன்பர்மேட்டிவ்‘ என்ற தன்மையில், ரசமானவையாகவும் பலரகமான தகவல்களைத் தருவனவாகவும் அமைகின்றன. ஜன்னல்— சச்சிதானந்தன், சுகிர்தராஜாவின் ‘லண்டன் குறிப்புகள்‘, இந்திரா பார்த்தசாரதியின் ‘வார்ஸா டயரி‘, சுஜாதாவின் ‘கடைசிப் பக்கம்‘, டெக்ஸன் எழுதும் அமெரிக்கா பற்றிய தகவல்கள், அசோகமித்திரன் பக்கங்கள், ஆர். முஸ்தபாவின் ‘உள்ளது உள்ளபடி‘ ஆகியவை இவ் வகைப்பட்டவை.

க. நா. சுப்ரமண்யம் ஆங்கிலத்தில் எழுதி தேவகி குருநாத் தமிழாக்கிய ‘பத்து சிறந்த இந்திய நாவல்கள்‘ என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தகுந்தது.

சிறிது காலம், நல்ல புத்தகங்கள் பற்றி அவற்றை ரசித்தவர்கள் விரிவாக எழுதிய கட்டுரைகளை கணையாழி பிரசுரித்து வந்தது. இலக்கிய வாசகர்களுக்கு உதவக்கூடிய கட்டுரைகளாக அவை அமைந்திருந்தன.

ராஜம் அய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்‘ நாவலை கணையாழி தொடர்கதையாகப் பிரசுரித்தது. தி. ஜானகிராமனின் மரணத்துக்குப் பின்னர், அவருடைய மிகப் பெரிய நாவலான ‘மோகமுள்‘ ளைத் தொடர்ந்து மறு பிரசுரம் செய்து வந்தது.