பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455

455

என்னும் இருவகைக்குள்ளும் பெயர்ச் சொற்களே

முந்தியவை. பிந்திய இடைச் சொற்கள், உரிச்சொற்கள் - என்னும் இரண்டனுள் இடைச் சொற்களே முந்தி யவை. எனவேதான், முன்பின் தோன்றிய முறை யைக் கொண்டு சொற்களைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற வரிசையில் நிறுத்தினர் இலக்கண நூலோர். இச் செய்திகளை ,

சொல்லெனப் படுப பெயரே வினை என்று

ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே. "இடைச்சொல் கிளவியும் உரிச்சொல் கிளவியும்

அவற்றுவழி மருங்கில் தோன்றும் என்ப. என்னும் தொல்காப்பிய நூற்பாக்களானும்,

அதுவே,

இயற்சொற் றிரிசொலியல்பிற் பெயர், வினை என இரண்டாகும் இடை, உரி அடுத்து நான்கு மாம் திசைவட சொல்லணுகாவழி.

T

என்னும் நன்னூற் பாவானும் நன்கு தெளியலாம். தொல்காப்பியரும் நன்னூலாரும், 'சொற்கள் பெயர்ச் சொல், வினைச்சொல் என இரு வகைப்படும் என முன் னர்க் கூறி, இடைச் சொல்லும் உரிச் சொல்லும் சேர்ந் தால் நான்கு வகையாகும்' எனப் பின்னர் இடைச் சொல்லையும் உரிச்சொல்லையும் இரண்டாந்தர நிலையில் பிரித்துப் பேசியிருக்கும் நுட்பத்தை உணர்க. இலக் கண ஆசிரியர்கள் இருவரும் இவ்வாறு கூறியிருப் பதன் பொருத்தத்தை ஒரு சிறிது விளக்குவாம் :

பெயர்ச் சொற்கள் எனப்படுபவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் பெயர்களே யாகும். முதற்கால மக்கள் முதலில் பொருட்களின்