பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 தமிழ் இலக்கிய வரலாறு பின்னரிருந்த வேறொரு புலவர் ஆவர். அவர் மூத்த பிள்ளையார் மீது இரட்டை மணிமாலை இயற்றியிருப்பதும் அவரது சிவபெரு மான் திருவந்தாதியிலுள்ள பாக்கள் எல்லாம், மடக்கு, திரிபு ஆகிய சொல்லணிகளை யுடையனவாக இருப்பதும் அவர் தம் அந்தாதி யில் திருச்சிராப்பள்ளிக் குன்றைச் சிவபெருமானுக்குரிய இட மாகக் கூறியிருப்பதும் 2 அவர் கி. பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இருந்தவர் என்பதை நன்கு உறுதிப்படுத்துவனவாகும். எனவே, இன்னாநாற்பது பாடிய கபிலரும் இரட்டை மணிமாலை களும் அந்தாதியும் இயற்றிய கபிலதேவ நாயனாரும் நம் தமிழகத் தில் வெவ்வேறு காலங்களில் விளங்கிய வெவ்வேறு புலவர் ஆவர். பெயர் ஒற்றுமை யொன்றே கருதி இவ்விரு புலவரையும் ஒருவ ரெனக் கோடல் சிறிதும் பொருந்தாதென்க. - இவ்வாசிரியரைப் பற்றிய பிற செய்திகளெல்லாம் தெரியவில்லை. இனி, இவர் இந்நூலில் எடுத்துக் கூறியுள்ள சில உண்மை கள் மறவாமல் என்றென்றும் உள்ளத்திற் கொள்ளத்தக்கனவா கும். அவை, 1. ' உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பின்னா' (பா. 17.) 2. ' இன்னா -ஈன்றாளை ஓம்பா விடல் ' (பா. 18.) 3. 1 குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா ' (பா. 20.) 4. ' தீமை யுடையார் அயலிருத்தல் இன்னா ' (பா. 25.) 5. 4 இன்னா -கள்ள மனத்தார் தொடர்பு' (பா. 34.) 1. மூத்த பிள்ளையாராகிய விநாயகரது வழிபாடும் வணக்கமும் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் தான் முதலில் தமிழகத்தில் தோன்றின என்பது ஈண் டுணரற்பாலதாகும். (தமிழ்ப் பொழில் 15-ஆம் துணரில் யான் எழுதி யுள்ள ' விநாயகர் வழிபாடும் தமிழ் நாடும் ' என்ற கட்டுரையில் இதனைக் காண்க.) திருச்சிராப்பள்ளிக் குன்றின் மேல் சிவாலயம் அமைத்தவன் முதன் மகேந்திரவர்மன் என்ற பல்லவ வேந்தன் ஆவன். (செந்தமிழ் 45.ஆ தொகுதியிலுள்ள திருச்சிராப்பள்ளி என்னும் எனது கட்டுரையாக இதனை நன்கறியலாம்.)