பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



  • 62

தமிழ் இலக்கிய வரலாறு பிறெமொழியாளரான ஏதிலார் ஆட்சியில் நம் தமிழ்மொழி சிறிதும் ஆதரிக்கப்படாமல் புறக்கணித்தொதுக்கப்பட்ட கி. பி. - நான்காம் நூற்றாண்டில் அகப்பொருளுக்கு ஓர் அரிய இலக்கிய மாக இனிய வெண்பாக்களில் இத்துணைச் சிறப்புவாய்ந்த இந் நூலை இயற்றிய மாறன் பொறையனார் என்ற கவிஞர் கோமான் இருவேறுலகத்தியற்கையோடிகலி, கல்விச் செல்வமும் பொருட் செல்வமும் ஒருங்கே படைத்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த ஓர் அறிஞராயிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். -