பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 159

ĝ♭!

'து' என்பது த், உ என்ற இரண்டும் சேர்ந்ததன் வடிவமாக எழுதப்பெறும் உயிர்மெய் யெழுத்து (பார்க்க : த, உ). து குறிலிணையின் ஈறாக நிற்குமிடத்தன்றிப் பிறவிடத்துக் குற்றியலுகரமாம் என்பர் இலக்கணப் புலவர். ஆனால் பெரும்பான்மையும் உகரம் குற்றியலுகரச் சாயலே பெற்று இன்று வழங்கப் பெறுகிறது

வடிவம் : கோலெழுத்து : அசோகர் காலத்தில் மெய்யெழுத்துகளின் கீழ் தெடுக்குக்கோடு ஒன்று இட்டு, மெய்யின் பின் உகரம் ஒலித்ததைக் குறித்தனர். ஆனால் நெடுக்குக் கோட்டில் முடியும் எழுத்துகளை இவ்வாறு குறிப்பது முடியாமையின் நெடுக்குக்கோட்டின் வலத்தில் குறுக்குக்கோடு ஒன்று இட்டுக் குறித்தனர். தமிழ் நாட்டுக் குகையெழுத்துகளிலோ, இடப்புறக்கோடும் வலப்புறக் கோடும் தகரத்தில் சமமாக இருக்க, உகரம் சேர்ந்தபோது இடப்புறக்கோடு வலப்புறக்கோட்டை விடச் சிறிது கீழிறங்கி இருக்கக் காண்கிறோம். எனவே, பிற மெய்யெழுத்துகளில் போலத் தகரத்திற்கும் உகரக் குறியைக் கீழ் நோக்திய கோடிட்டே எழுதலாயினர் என்பதாயிற்று கீழ்நோக்திய நீட்டம் கொக்கியாகி, மேற்புறமாகச் சிறிது வளைந்துவர, ஏழாம் நூற்றாண்டில் அதன் வலப்புற வளைவுமுனை மேலேறி லகரம் போல் தோன்றுகிறது சிலபோது ‘கு’ என்பதிற்போல வலப்புறம் சுழியாக வரவும் காண்கிறோம். இப் பின்னைய வடிவம் பழையது என்பர் எட்டாம் நூற்றாண்டில் பழைய நிலைமைகள் மறைய வில்லை என்பது சில வடிவங்களால் தெரியவருகிறது இந்த நூற்றாண்டில் கொக்கியாக நில்லாமல் நேர் கோடுகளாய்க் கோணங்கள் பெற்று, இந் நாளைய