பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 185

திறப்பதற்கே முயற்சி எழுகிறது. இந்தப் பிடிப்புநிலை மிகச் சிறு கால அளவினது எனலாம். விடுநிலையோ, ஒலி வகையாலும், அளவுவகையாலும், அசைகளின் கோல வகையாலும் சிறந்து தோன்றுவதும் உண்டு. இதனை யகர வகர உயிரில் காணலாம். திறப்பு ஒலிகளை மூன்று வகையாகப் பாகுபடுப்பது உண்டு. வாய் மூடி யிருந்தாலும், மூக்குத் திறந்திருக்கும் மெல்லொலிகள் ஒருவகை. வாய் இடையே முழுத்தடை எழும்போது நாவின் இருபுறத்தும், பற்களினூடும், இதழ்களினூடும் மூச்சு ஒட நிற்கும் திறப்பொலி இரண்டாம் வகை இவற்றை இதனால் ஒர மெய்கள் என்பர்.

உரசு ஒலிகள் மூன்றாவது வகையாகும் இடையண்ண வல்லொலியும், மெல்லொலியும் முறையே சகரமும் ஞகரமும் ஆம் இடையண்ண உரசொலிகளில் ஒலிப்பிலா ஒலி என்பதாம். மொழிக்கு முதலிலும் உயிர்களுக்கிடையிலும் வரும் தமிழ்ச் சகரம் பல இடங்களில் இந்த ஒலியே பெறுவதைக் கண்டோம். கரத்திற்கு இனமான ஒலிப்புடை ஒலி யகரம் ஆகும்; இதனை ஒலிக்கும்போது நாவின் மேற்புறம் தட்டையாக நிற்கும்போது, நவிற்கும் அண்ணத்திற்கும் இடையே உள்ள இடைவெளி மிகமிகச் சிறிதாக அமையும்; ஆனால் பரந்து நிற்கும்; அவ்விடைவெளி வழியாக மூச்சானது உரசிக்கொண்டே வெளிவரும்

'அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை

கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும், என்பது தொல்காப்பியம். மிடற்றெழு வளியிசை” என்பதால் யகரம் ஒலிப்புடை ஒலி எனக் கொள்ளலாம்; ‘அண்ணம் சேர்ந்த' என்பதனால் அது வல்லண்ண ஒலி என்பது தெளிவு: 'கண்ணுற் றடைய’ என்பது இஃது உரசொலி என்பதைக் குறிப்பதாகக் கொள்ளலாம். 'உரலாணியிட்டாற் போலச் செறிய” என்று நச்சினார்க் கினியர் உவமை காட்டிப் பொருள் கூறுவர். இடை