பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 த. கோவேந்தன்

மாற்றவோ, திரிக்கவோ இயலாது சமுதாயம் கூடி முடிவு செய்து மாற்றுவதும் திரிப்பதும் இல்லை ஒவ்வொரு மாறுதலும் திரிபும் யாரோ ஒரு தனி மனிதரிடம், அவர் அறிந்தோ அறியாமலோ எப்படியோ தோன்றி, சமுதாயத்தால் படிப்படியாக ஏற்கப்பட்டு நிலை பெறுகின்றன

ஒப்பாக்கம் (Analogy) என்பது மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ளது ஒன்றை உணர்ந்த பின், அதைப் போல மற்றொன்றைப் படைக்கும் ஆற்றல் அது நாடு-நாட்டை உடையவன்-நாட்டான் எனச் சொல் அமைதலை உணர்ந்ததும்; காடு-காட்டை உடையவன்-காட்டான் எனப் புது சொல் படைத்தல் எளிதாகின்றது உண் என்ற அடிச்சொல்லிலிருந்து, ஆண்பாலுக்குரிய நிகழ்கால வினையாக உண்கிறான் என்ற சொல் இருத்தலைக் கண்டமையால், வாழ் என்பதிலிருந்து வாழ்கிறான் என்ற சொல் அமைத்தல் எளிதாகிறது அவ்வாறு படைத்து அமைக்கப்படும் சொற்கள் ஒர் ஒழுங்கு உடையனவாக இருக்கும்

சொல்லமைப்புக்கு ஒப்பாக்கம் இன்றியமை யாகதாக இருத்தல் போலவே, சொற்றொடர மைப்புக்கும் அது இன்றியமையாதது ஆகும் அதனால் தான் ஒரு மொழியின் சொற்றொடர்களில் உள்ள அமைப்புகள் ஒருவகையாகவும், மற்றொரு மொழியின் சொற்றொடர்களில் உள்ளவை மற்றொரு வகையாகவும் இருக்கக் காண்கிறோம் நான் பள்ளிக்குப் போகிறேன் என்று எழுவாயை முன்னும், இடத்தைப் பின்னரும், வேற்றுமையுருபை அதையடுத்தும், வினைமுற்றை இறுதியிலும் வைத்துத் தமிழிலும், மற்றத் திராவிட மொழிகளிலும், ஏனைய இந்திய நாட்டு மொழிகளிலும் வழங்கும் சொற்றொடரமைப்பு ஒருவகையாக இருக் கிறது நான்-போகிறேன்-கு-பள்ளி ( go to the school) என்ற முறையில் ஆங்கிலச் சொற்றொடரமைப்பு