பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 211

மெய்யெழுத்துகளில் உயிர்க்குறியை எழுதுவதில் பல முறைகள் காணப்படுவது மற்றொன்று சிலவற்றுக்குத் தனி உருவங்களும் உண்டு பிற்காலத்துச் சாசனங்களில் பல எழுத்துகள் ஒரே விதமான உருவங்களைப் பெற்றிருந்தன அதனால், பழைய காலத்துச் சானங்களை வாசிப்பது சுலப மாயினும், பிற்காலத்தனவற்றைச் சந்தர்ப்பத்தை ஒட்டியே வாசிக்க வேண்டும். இல்லை யேல் பல தவறுகள் நேரிடக் கூடும் இவ்வகை எழுத்து வழக்கு ஒழிந்த தற்கான காரணங்களுள் இதுவும் ஒன்றாயிருக்கலாம் இவ் வகைக்குத் தெக்கன் மலை யாளம்’, ‘நானாமோனா’ என்ற வேறு பெயர்களும் உண்டு நானாமோனா என்ற வேறு பெயர்களும் உண்டு நானாமோனா என்பது நமோ என்பதை எழுத்துக் கூட்டிப் படிப்பதேயாகும், பிள்ளைகளுக்கு எழுத்துச் சொல்லிக் கொடுக்கும்போது முதலில், நமோத்துசிந்தம் என்று தொடங்குவது வழக்கம் அதனால் இடவ்வகை யெழுத்து வழக்கு வீழ்ந்த பிறகும், ஒரு காலத்தில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் போது இதனையே முதலில் கற்றுக் கொடுத்து வந்தார்கள்

வட்டெழுத்தின் வளர்ச்சியை முன்பக்கம் படத்திலிருந்து நன்றாக அறிந்துகொள்ளலாம்

பத்தி 1 : திருநாதர்குன்றக் கல்வெட்டு, சுமார்

நான்காம் நூற்றாண்டு

பத்தி 2 : இதுவும் இதற்கு அடுத்த இரண்டு பத்திகளும் சுமார் கி பி 760ஆம் ஆண்டில் பாண்டிய அரியணை ஏறிய நெடுஞ்சடையன் எனப்படும் ஜடிலவர்மன் பராந்தகனுடைய காலத்து மூன்று வேறு சாசன எழுத்துகளைக் காட்டுவன இந்தப் பத்தி அவனுடைய வேலங்குடிச் (சென்னைப் பொருட் காட்சிசாலை) செப்பேடுகளினின்றும் எடுத்தது.

பத்தி 3 . அதே அரசனுடைய ஆனைமலைக் கல்வெட்டு '