பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 த. கோவேந்தன்

ரெட்டி சாசனங்களிலும் காணப்படுகிறது இறுதியாக விஜயநகர எழுத்துகளின் வரிவடிவங்கள் முற்றிலும் இக்காலத்து எழுத்துகளையே போன்றவை (பார்க்க : எழுத்து-தமிழ் எழுத்துகள்)

பிராகிருதம் :

இப்பெயர் பிரகிருதி என் சொல்லிலிருந்து வந்தது; பிரகிருதி என்றால் 'இ ற்கை அதிலிருந்து வந்தது, மூலம் காரணம் என்று பொருள் ஒரு மொழிப் பெயராகப் பிராகிருதம் என்ற சொல் வழங்கும்போது, மேற்சொன்ன இரு பொருள்களையும் அது சுட்டிக் காட்டும். உலகில் பேச்சு வழக்கில் ஏற்படும் கொச்சை மொழி பிராகிருதம் இலக்கணமாயும், இலக்கியத்தில் கையாளப்படும் செம்மையான மொழியிலிருந்து வழுவி, மக்கள் பேச்சில் வழங்கிவருவதுமான மொழி என இதைச் சொல்லலாம். பேச்சு வழக்கில் இருப்பதே, துயதாக எழுத்து வழக்கில் கையாளப்படுவதால், பிராகிருதத்திலிருந்து எழுந்ததே சமஸ்கிருதம் என்றும் சொல்லலாம். வித்திலிருந்து மரம், மரத்திலிருந்து வித்து என்பதுபோலச் செம்மொழி யிலிருந்து கொடுமொழி, கொடுமொழியிலிருந்து செம்மொழி என்று சுற்றிச் சுற்றி வருவது மொழியின் இயல்பு. . . * *

சமஸ்கிருதத்தை நாம் முதன் முதலில் தெரிந்து கொள்வது ரிக் வேதத்திலாகும் ரிக் வேதம் ஒரு தொகை நூலாதலால் அதில் காணப்படும் பல தரப்பட்ட கவிகளின்பாட்டுகள், ஆங்காங்கு வேற்றுமையுள்ள மொழியில் அமைந்திருக்கின்றன. பண்டைக்காலத்தில் இம்மொழி ஆங்காங்குச் சற்று வேற்றுமைகளுடன் பேசப்பட்டுப் பலவகையான பேச்சு மொழிப் பிரிவு களைக் கொண்டிருந்ததென்பது பின்னால் இலக்கணம் வகுத்த யாஸ்கரர், பாணினி முதலியோர் வட வழக்கு, கீழை வழக்கு என்று கூறுவதிலிருந்தும் தெரிகிறது. இப்படி ஆங்காங்குப் பேசப்பட்ட மொழிப் பிரிவுகளே,