பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 த. கோவேந்தன்

செவிக்கு மட்டும் புலனாகி, உடனே மறைவது. அதைப் பிடித்துக் காப்பதற்குச் சில அரிய கருவிகள் வேண்டும். எழுத்துமொழி கட்புலனாவது; யாவரும் எளிதில் எழுதிக் காக்கக் கூடியது. செவி வழியாக இலக்கியம் நீடு வாழ்வதில்லை. எழுதப்படும் இலக்கியம் தலைமுறை தலைமுறையாகப் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்பதால், பெரு மதிப்பும், செல்வாக்கும் பெறுகிறது. தவிர, எழுத்து மொழிக்குத் துணையாக நிகண்டுகள், அகராதிகள், இலக்கண நூல்கள் முதலியன ஏற்பட்டுச் சிறப்புத் தேடித் தருகின்றன.

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் வேறுபாடு தோன்றும் இடங்களில், எழுத்து மொழியின் தீர்ப்பு வலிமை மிக்கதாக விளங்குகிறது; அதற்குத் துணை பல வந்து உதவுகின்றன. ஆகவே, மொழி ஆராய்ச்சியில் தலைப்பட்டவர் எளிதில் போற்றத் தக்கதாக எழுத்துமொழியே முன்வந்து நின்றது. மொழியியல் வளர்ந்து முன்னேறிய பின்னரே அது போதாது என்றும், குறையுடையது என்றும் தெளிவு ஏற்படலாயிற்று. அங்கங்கே மக்கள் பேசும் பேச்சு மொழியைப் பல கருவிகள் கொண்டு ஒலிப்பதிவு செய்தும், கேட்டுணர்ந்து ஆராயும் முறை பெருகுவது ஆயிற்று. அவற்றின் பயனாக, இன்று மொழியியல் திட்ப நுட்பம் வாய்ந்த அறிவியல் துறையாக வளர்ந்து வருகிறது.

மொழியியல்-ஒலிமுறை :

தொடக்கத்தில் மனிதன் பேசியபோது, ஒலிகளை உயிர் மெய் முதலியனவாகப் பாகுபடுத்தி உணர்ந்து பேசவில்லை. சொற்களைப் பெயர், வினை, இடை என்று பாகுபடுத்தியும், அடிச்சொல், பிற உறுப்புகள் என்று பிரித்துணர்ந்தும் பேசவில்லை. கருத்துகளுக்கு அறிகுறி