பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 த. கோவேந்தன்

வகையில் பொருந்தாது. எழுதும் வழக்கத்தை நோக்க வ, ர முதலியவற்றை ஓர் எழுத்து என்று சொல்லி வந்தாலும் அவை ஒவ்வொன்றும் வ்அ, ர்.அ என இரண்டிரண்டு ஒலிகள் சேர்ந்த கூட்டெழுத்துகளே எனலாம் இத்தகைய எழுத்துகளைப் பிற்காலத்து இலக்கணம் உயிர்மெய் என்று குறியீட்டு ஒர் எழுத்தைப்போல் கொண்ட போதிலும், ஒலிமுறைப்படி இவை கூட்டெழுத்துகள் எனலாம். வ்-அ-ர்-அ-ம்-ப்-உ என்பதே உண்மையாகப் பிரித்துக் கூறப்பட வேண்டிய எழுத்துமுறை இதை விட்டு, வரம்-பு என்று பிரித்துக் கூறும் முறை ஏற்பட்டதற்குக் காரணம் உண்டு மெய்யெழுத்துகள் தனித்து இயங்காதவை, உயிருடன் சேர்ந்தே இயங்குபவை இவ்வாறு உயிருடன் சேர்ந்தே இயங்கும் மெய்களைச் செவியால் கேட்டுணர்ந்தவாறே எழுத்து வடிவிலும் எழுதத் தொடங்கினார்கள் ஆராய்ந்து நோக்கினால் உயிர்மெய்யை ஒர் எழுத்து என்பதைவிட ஒர் அசை என்பது பொருந்தும் ஆகையால், தமிழிலும் மற்ற இந்திய மொழிகளிலும் அசை கூட்டும் முறையே உள்ளது என்பது சிலர் கருத்து வடமொழி, இந்தி முதலான மொழிகளில் மெய்யுடன் உயிர் சேர்ந்து எழுதப்படும் உயிர் மெய்யெழுத்து அல்லாமல் இரண்டு மூன்று மெய் யெழுத்துகள் சேர்ந்து ஒர் எழுத்துப்போல் எழுதப் படும் கூட்டெழுத்துகள் பல உண்டு த்ர, (கி.--R = ख), ம்ய (R+அ = r) போன்றவற்றைச் சேர்த்து எழுதுவதால், எழுத்துகூட்டும்முறை அவற்றில் சிறிது வேறுபடுகிறது தமிழில் அத்தகைய கூட்டெழுத்துகள் இல்லை. பத்து' முதலான சொற்களில் ‘த்து முதலிய இரண்டு மெய்களைச் சேர்த்து ஓர் எழுத்துப் போல் து து என்று எழுதும் வழக்கம் சில இடங்களில் ஒரோவழி இருந்து வந்தபோதிலும், இது நிலைபெறவில்லை

ஆகவே, எழுத்துகளை எழுதியவாறே ஒலிப்பதா லும், கூட்டெழுத்து முதலிய சிக்கல் ஒன்றும் இல்லாமை யாலும், தமிழில் உள்ள எழுத்துக் கூட்டும் முறை எளிமையான இயற்கை முறை எனலாம் (மு வ)