பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B4 3. த. கோவேந்தன்

வெடிப்பொலியில் ஒற்றுதலால் வரும் : (1) முழுத் தடையும், (2) ஒட்டியது சடுக்கெனப் பிரிவதால் வரும் வெடிப்பும் என இரண்டு நிகழ்ச்சிகள் வரும் வெட்கம் என்பதில் ட்க என்பதில்போல, ஒரு வெடிப்பெழுத்தின் பின் மற்றொரு வெடிப்பெழுத்து வருமானால், முன்னைய வெடிப்பொலியில் (ட்) நிறுத்தொலியாம் தடை ஒன்றுமே நிகழும்; வெடிப்பென்பது நிகழாமல் இரண்டாம் வெடிப்பெழுத்து (க்) ஒலிக்கத் தொடங்கும்; அங்குதான் வெடிப்பு நிகழும் பாக்கு என்பதில் போல 'க்' இரட்டித்து வரும் இடங்களில் இந்த உண்மையைக்

éfᎢᎧᎼᏈᏘ Ꮷ95

தமிழில் க் என்னும் ஒலி மொழிக்கு முதலில் வரும்: மொழியின் ஈற்றில் வருவதில்லை. ஈற்றில் பெரும் பான்மையும் உகரமும், சிறுபான்மை பிற உயிர் எழுத்துக்களும் பெற்றே வரும் ஒரலகக்குக் குறை யாதவை முன் வந்தால் உகரம் குற்றியலுகரம: ஒலிக்கும்; இதனை இதழ் குவியா உகரம் என்பர் என்பது இதன் குறி; யா என்பது பின் வந்தால் இந்த உகரம் மேலைய உகரத்திற்கும் இகரத்திற்கும் இடைப் பட்ட ஒலி பெறும் என்பது இதன் குறி. இதனைக் குற்றியலிகரம் என்பர் கற்றியலுகர ஒலி என ஒலியாது எனவே ஒலிக்கும் என்பர் எம். பவுலர் (M Fowler) என்ற அறிஞர் மொழிக்கு இடையே உயிரெழுத்துக்களோடு சேர்ந்து உயிர்களுக்குப் பின்னும் இது தனித்து வரும்; யரழ-இன் பின்னும் உயிர்களின் பின்னும் இரட்டித்து வரும்; ட் (வெட்கம்), ற் (முற்கு), ல் (பல் கடிது), ள் (முள் கடிது), ண்(மண் கடிது), ன்(பொன் கடிது), ங் (அங்கு) என்ற எழுத்துக்களின் பின்னும், தனித்து வரும் மெல்லெழுத்துக்களில் பெரும்பான்மை யும் ங் என்பதன் பின் வரும் ம் என்பது ங் எனத் திரியும் (மரங்களை); ஞ், ந் இப்போது மொழியீற்றில் வருவதில்லை; முன்னாளில்