பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 87

ஒலிக்கின்றது என்பதினும் க் என்ற முழுத்தடைச் செறிவொலியே நெகிழொலியாக உயிர்களினிடையே ஒலிக்கின்றது என்பதே உண்மை என்பர் அந்த அறிஞர்.

இலங்கைத் தமிழர்கள் வெடி ஒலிப்பொலிகளையும் இவ்வாறு நெகிழொலியாக ஒலிப்பதனால் வட்டுக் கோட்டை என்பதனை Vaddukkoddai என எழுதக் காண்கிறோம் உயிர்களுக்கிடையே க் என்பது g என்ற ஒலி பெறக் கண்டே கால்டுவெல் எழுதினார் என அறி தலும் வேண்டும். பகல் என்பதில் க் என்பது J என்றும் h என்றும் என்றும் ஒலிக்கக் காண்கிறோம் பவல் என இழிசினர் வழக்கிலும் பால் என இலக்கிய வழக்கிலும் மாறக் காண்கிறோம் முடிவில் க் என்பதே மறைகிறது எனலாம் (k-zero). ஜே ஆர் பிரித் (J.R. Frith) என்ற அறிஞர் ககரத்தின் பிற ஒலிகளையும் கண்டெழுதியுள்ளார். (1). கல் என்பதில் போல க் என்பது மொழிக்கு முதடிலில் வரும்போதும், (2). பக்கம் என்பதிற் போலக் ககரம் இரட்டித்து உயிர்களினிடையே வரும் போதும், (3). தீர்க்க என்பதிற்போல ரகரத்தின் பின் இரட்டித்து வரும் போதும், k என்ற ஒலி பெறும் நாங்கள் என்பதிற் போல ங்கரத்தின் பின் g என்ற ஒலி பெறும். II. பகல் என்பதிற்போலத் தனியே உயிர்களிடையே (intervocalic) வரும்போது X என்ற ஒலி பெறும்; IV, அழுகி என்பதிற் போல மொழியீற்றில் இகரத்தோடு வரும்போது என்ற வல்லன உயிர்ப்பு உரசொலி பெறும். V. குருடர்கள், பிறகு என்பவற்றிற்போல மொழியின் கடையசையில் க என்றோ கு என்றோ பெறும். எஃகு என்றபோது ககரம், மெல்லண உயிர்ப்பு உரசொலியாய் x என்றும், மெல்லண ஒலிப்பு உரசொலியாய் v என்றும் ஒலித்தலைக் கண் டோம். (பார்க்க: ஃ ஜிஹ்வா மூலம் இது முன்பு தவறாகக் காகபத்யம் என அச்சிடப்பெற்றுள்ளது.)

அ, ஆ, இ, ஈ என உயிரெழுத்துகளைத் தொடர்ந்து ஒலிக்கும்போது இடையிடையே குரல்வளை மூடிக்