பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 த. கோவேந்தன்

வட்டெழுத்து :

8ஆம் நூற்றாண்டு そう・ 10ஆம் நூற்றாண்டு ് ഡ ` ു വ് 13ஆம் நூற்றாண்டு েৈঠ>

பொருள் : கூ என்னும் ஒரெழுத்தொருமொழி உலகம் என்று பொருள்படும். இது கூவு என்று இன்று வழங்குவதன் பழைய வடிவாகவும், கூழ் என்பதன் மரூஉ ஆகவும் வழங்கும். குக்கூ கூ கூ கூ கா என்பது இரட்டித்து வந்த ஒலிக்குறிப்புகளாம்.

ډ68

க்+எ என்ற இரண்டும் சேர்ந்து உயிர்மெய் யெழுத்தாக ஒன்றாக எழுதப்பட்ட வடிவம் இதுதான். சாரியை இன்றி எழுத்தினைச் சுட்டுவதனைக் கெப் பெரிது’ என்ற வழக்கு விளக்குகிறது. கெ என இரண்டு குறிகளாக எழுதப்பெறுவதில் முதலில் உள்ளதனைக் கொம்பு என்பார்கள். இதுவே எ என்பதனைக் குறிக்கும். ஒலிக்கும் பொழுது க் முன்னும் எ பன்னும் ஒலித்தாலும் வடிவெழுத்தில் எகரக்குறி ககரத்தின் முன்னாக இவ்வாறு முதலில் எழுதப் பெறுவதால் இந்த எழுத்தினைக் கற்கும் குழந்தைகளுக்குப் பெருங் குழப்பமாகவே இத்தகைய எழுத்துகள் முடிகின்றன. ஆனால் தொடக்கத்தில் இந்த இரண்டு கறிகளும் பிரிவின்றி ஒன்றாகச் சேர்த்து எழுதப் பெற்றன. கி. பி. 10ஆம் நூற்றாண்டில் இவை இரண்டும் வேறு பிரித்து எழுதப்பெறும் குறிகளாக முற்றும் பிரிந்து போயின.