பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அயச்சத்து நிறைந்த அருமையான பொருள். எங்கும். கிடைக்கும்.

அஸ்தி ஜூரத்துக்கு

விஷ்ணுகிராந்தி இலைகளைப் பசும்பால் விட்டு அரைத்துக் கலக்கி குடித்தால் எலும்புக்குள்ளே உள்ள காங்கை நீங்கும். தினந்தோறும் காலையில் மட்டும் ஒரு வேளை போதும். மூன்று நாளைக்குமேல் மருத்து தேவை இராது.

கணைச் சூட்டுக்கு

காய்ச்சிய பசுவின் பாலில் வில்வப் பழச்சதையைக் கலந்து, சக்கையை நீக்கி உட்கொண்டால் கணைச்சூடும் கடுமையான வெக்கை நோயும் நீங்கும். தொடர்ச்சியாக இருபத்து நான்கு நாள் அருந்தலாம். எவ்விதப்பத்தியமும் இல்லை.

வெட்டை நோய்க்கு

1. காட்டுக்கொத்தவரை இலைச்சாற்றை நல்லெண்ணைய்யில் கலந்து உட்கொள்ள, வெட்டைநோய் விரைவாகத் தீரும். காலையில் மட்டும் மருந்து அருந்த வேண்டும். மூன்றே நாட்களுக்கு மருந்து போதுமானது.

2. சிறு அம்மாம் பச்சரிசிப் பூண்டைக் கொண்டுவந்து வேர் உட்பட அப்படியே அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்துப் பசும்பாலிற் கரைத்து காலை மாலை குடித்துவர, மூன்றே நாட்களில் வெட்டைநோய் நீங்கும். பத்தியம், கண்டிப்பாய்ப் புளி கூடாது.

வெட்டை சூட்டுக்கு

1. ஆலம் விழுதுத் தளிரையும் அதன் விதையையும் அரைத்துப் பசும்பாலிற் கலந்து உட்கொண்டால், வெட்டை, மேகம், உடல் எரிச்சல் முதலிய யவுேம்நீங்கும்.