பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மஞ்சட் காமாலை

நோய்களில் மிகப் பொல்லாதவற்றுள் மஞ்சட் காமாலையும் ஒன்று. இந்நோயை முற்றவிடுவதன் மூலம் உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும். இந்த நோய்க்குக் கை கண்ட மருந்து அடியிற்கண்ட ஒன்றுதான்:

சங்கம் வேர்ப்பட்டை 1 வராகன் எடை
அதிமதுரம் 1/2 பலம் ,,
வெங்காயம் 1/2 பலம் ,,
சீரகம் 1/8 பலம் ,,

இந்நான்கையும் அரைத்து, பசுந்தயிரில்-கிடைக்காவிடில் எருமைத் தயிரில் கலக்கி உண்ணவும். மூன்று நாள் காலையில் மட்டும் உண்ண மஞ்சட் காமாலை நோய் நீங்கும். இச்சா பத்தியம்.

நல்ல பாம்பு கடித்தால்

உடனே வாழைமரம். இருக்குமிடத்திற்கு அரிவாளுடன் ஓடுங்கள் அடியில் ஒரு வெட்டு, நுனியில் ஒரு வெட்டுப் போட்டு துண்டத்தை எடுத்து வாருங்கள். பட்டையாக உரித்து மண் சட்டியில் அல்லது பீங்கான் கோப்பைகளில் சாறு பிழியுங்கள். காற்படி சாற்றைக் கடிபட்டவனுக்குக் கொடுங்கள். நல்லபாம்பின் நஞ்சு ஒன்றும் பண்ணாது. ஆள் கட்டாயம் பிழைத்துக் கொள்வான்.

உங்களுக்குச் செய்தி வர நேரம் ஆகிவிட்டாலும், வாழைமரம் கொண்டுவர நேரம் ஆகிவிட்டாலும், கடி பட்டவன் பல் கிட்டிவிடும். வாழைப் பட்டைச் சாற்றை இவன் குடிக்க முடியாது. ஆகவே பற்றுக் குறடால் பல்லை விலக்கி மருந்தை விடச் செய்யாதீர்கள். இதை விட அறியாமை வேறில்லை. பல்லை விலக்கினாலும் தொண்டையை விலக்க முடியாது.