பக்கம்:தமிழ்மாலை.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

ஆம் அடிகளார்க்கு அக்காதலன் அத்துணை முடங்கலையும் அனுப்பியுள்ளான்.கதை ஆசிரியர்தாம்படைக்கும்தாம்தோய்ந்துநிற்பர்;ஒன்றிப் பேசுவர்; பங்குபெறுவர். இப்பாங்கில் அடிகளார் இக்கதை உண்மையென்ற உணர்வுகொள்ளும் நிலைக்கு இவ்வாறு தம் பங்கையும் இணைத்துள்ளார். இதுபோன்றே சிந்தனைக் கட்டுரையிலும் முருகவேள் என்ற தம் பெயரை இணைத்தும் தாம் ஒன்றுகிறார்.

பல்வகைப் புது உத்திகள் அடிகளாரால் கையாளப் பெற்றுள்ளன. ஒவ்வொரு முடங்கலிலும் முதலில் காதலரை விளித்து எழுதப்பெரும் தொடர்கள்,

"நேசரே! பெருமானே! என் மனத்தடத்தின் மலர்ந்து மணக்கும் தாமரையே உள்ளக் கமலத்தொளிரும் என் காதற் செல்வமே'

என்றெல்லாம் வெவ்வேறு அன்பு தவழும் தொடர்களாக அமைக்கப் பெற்றுள்ளன.

கதையோட்டம் மட்டும் முடங்களில் இல்லை. உலகியல் தன்மைகள்; சிவன் அருள்விளக்கம், ஒப்புரவாற்றல் சிறப்பு, அதன் நோக்கம், தமிழில் வடமொழி கலவாப் பாங்கு என அடிகளாரின் கோட்பாடுகள் ஆங்காங்கு மிளிர்கின்றன. பகுத்தறிவையும் ஒதுக்கிவிடவில்லை. புராணத்தில் குரங்கு தாவியது, மலையைப் பெயர்த்தது, பத்துத்தலை ஒருவனுக்கு, நிலத்தோடு பெயர்த்துப் பெண்ணைத் தூக்கிச் செல்வது' எனப்பட்டவையெல்லாம் கண்டனத்தால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

இப்புதினம், சிறுவம் மணத்தீமை, காதல் மண உயர்வு, கைம்பெண்மண ஆக்கம், உலகியல் - அறிவியல் வற்புறுத்தல் என்றெல்லாம் பளிச்சிடுகிறது. ஆனால், ஒன்றைக் குறித்தாக வேண்டும். அது இதில் தனித்தமிழ்க் கொள்கையின் நடைமுறை. அடிகளாரே முகவுரையில்குறித்துள்ளார்:

'கோகிலா இடம்பெற்ற குடும்பம் வடநாட்டவராதலாலும், அவர்களுடைய உரையாடல்களின் இடையிடையே வடசொற்களும், கொச்சைச் சொற்களும் கலந்திருத்தல் காணலாம். இவ்வுரைக் குறிப்பு அடிகளார் புதின ஆசிரியர் நிலையிலிருந்தும் மரபுத்தமிழ், தனித்தமிழ்க் கொள்கையிலிருந்தும் சற்று தொய்வுபடுகிறார் என்றாகிறது.அத்துடன் புதினம்போன்றவற்றை எழுதப்புகும் ஆசிரியருக்கு இது வேண்டப்படும் ஒன்று என்று காட்டுவது போன்று அமைத்து அடிகளாரை நாம் சற்று ஒரக்கண்ணால் காண வைக்கிறது.

கோகில தம் உண்மைப் பெற்றோரைப் பற்றிய புதிர் கதையின் புதிர்.

தி றமற 鲇 ஒ - புத் கொள்ளையர் கூட்டத்தில் அன்னார் இருத்தலைத் திடுக்கிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/102&oldid=687170" இலிருந்து மீள்விக்கப்பட்டது