பக்கம்:தமிழ்மாலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

பேச்சு - உரையாடல் என்னும் நான்கு சொற்களின் கூட்டுருவம். இந்நான்கு பொருள்களும் கொண்ட இச்சொல்லின்படியும் அடிகளார் மொழி பற்றியும் அதன்பால் தாம் கொண்ட ஆர்வவேட்கையையும், சொல்பற்றியும், பேச்சு உரை நடை பற்றியும் திறனாய்வு செய்துள்ளார்.இக்காலத்தில் தனியொருகலையாக அறிமுகமாகி வளரும் மொழியியலின் அகக்கூறு, புறக்கூறு எல்லாம் வெளிப்படுமாறும் கருத்துக்களைத் தந்துள்ளார். தமிழின் ஒலியெழுத்துக்கள் என்னும் கட்டுரை மொழியியலின் அகக்கூறான ஒலிபற்றி விளக்கித் தமிழ் எழுத்தின் ஒலிநுட்பத்தை ஒலிக்கிறது. -

முதற்குறள் விளக்கத்தில் அகர ஒலிக்கூறு, ஒம் என்னும் ஒலிக்கூறுகளை ஆய்ந்துள்ளார். பதிவதால் பாதம், பலவற்றைக் கடந்ததால் கடவுள் என்றெல்லாம் சொற்கூறுகளை ஆய்ந்துள்ளார். மனு என்னும் தமிழ்ச்சொல்லை வடமொழியுடனும், ஒரை என்னும் தமிழ்ச்சொல் மூலச்சொல் என்னும் பண்டை எபிரெய மொழியில் ஏறிய வரலாற்றையும் விளக்கியுள்ளார். இவ்வாறெல்லாம் எழுதப்பட்டவை கட்டுரைகளில் சிதறல்கள்தாம்.ஒருதனிநூல் இல்லையென்றாலும், தனித்தமிழும் கலப்புத் தமிழும் என்னும் கட்டுரையுடன் தமிழ்த்தாய்’ என்னும் தனிநூலில் மொழியியல் தமிழ் மொழியில் வைத்து விளக்கியுள்ளார். சிறுவர்க்கான செந்தமிழ் இளையர்க்கான இன்றமிழ்' என்னும் இரண்டும் மொழிப்பாங்கின் எடுத்துக்காட்டுநூல்கள்.

இவையன்றி மொழியின் புறக்கூறுகளான மொழித் தோற்றம், மக்கள் வரலாறு,நில வரலாறுகளையும் பிற பல முழு நால்களில் ஆராயப்பட்டுள்ளன. இவ்வகைகளால் அடிகளார் மொழியியல் துறையில் கருத்துக்கள் வழங்கியுள்ளார் என்றும், மொழி இலக்கிய இலக்கண ஆய்வால் இத்துறையில் தம் பங்களிப்பை வைத்துள்ளார் என்றும் கொண்டு மகிழ முடிகின்றது.

13. அரசியல் (2 நூல்கள்)

அரசியல் பற்றி அடிகளார் நேரிடையாகத் தனியொரு நூலும் எழுதவில்லை. இதுபோன்றே அரசியல் பற்றியும் தனியொரு நூலைப் படைக்கவில்லை. ஆயினும், இந்தி மொழிப் பயிற்சி ஏற்புடையதாகுமா? என்னும் கட்டுரையும், இந்தி பொது மொழியா? என்னும் சிறு நூலும், இதன் gyìéìòù syy5JUDITéluJ Can Hindi be a Lingua franca of India' sTbiirgyó நூலும் அரசியல் சார்புடையவை. -

இந்தி மொழி பற்றிய உருத்தோற்றம், அதன் தனிப்பண்பு இல்லாமை, பொதுமொழிக்குரிய மொழியமைப்பின்மை என்றெல்லாம் இந்நூலில் உள்ளமை மொழிபற்றிய கருத்துக்களாயினும் இந்நூலை எடுத்ததன் நோக்கம் இந்திய ஆட்சி அரசியலில் தமிழ்மக்கள் தள்ளப்பட்ட நிலைக் குடிமக்களாவர் இந்தித் திணிப்பால் என்பதாகும். இதன் கண் அரசியல் அடித்தளம் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/104&oldid=687172" இலிருந்து மீள்விக்கப்பட்டது