பக்கம்:தமிழ்மாலை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q9

வரலற்றில் அரசியல் காற்று வீசியதைக் காட்டவும் வாயில்களாகக் கொள்ளப்பட்டன.

அடிகளாருக்குப் பின்னரும் இந்தி தலைதூக்கியது. பெரியார் அண்ணாவின் தாக்குதல்களால் சற்று பதுங்கியது. இன்று மீண்டும் பாயப் பார்க்கிறது.

பதுங்கிஇருட்டில் பாய்கிறது.

“இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமா?

எல்லோரும் கேளுங்கள் நாட்டினரே”

என்று பாடியதைச் சற்றுத் திருத்தி எல்லோரும் பாருங்கள் நாட்டினரே என்று பாடிப் பார்க்கும் அளவு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரிகிறது.

இந்திச்சாடல்

இந்திமைய அரசின் அனைத்து அலுவலகங்களிலும் நடைபோடுகிறது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஈட்டுறுதி நிறுவனங்கள், புகைவண்டித் தொடர் அலுவலகங்கள் முதலியவற்றிலும் இந்திசெங்கோல்பிடித்துநிற்கிறது. தில்லியில் நிகழ்ந்த குடியரசு நாள் விழாவில் பங்குபெறும் மாணவர்களில்இந்தி கற்றோர் தவிர மற்றையோர் நீக்கப்பட்டனர். சென்னையில் நவோதயாப் பள்ளிகள் என்னும்போர்வையில்இந்தி உடல்மறைத்துத்தலைதூக்கிநிற்கிறது. அதற்கு இன்றைய தமிழக அரசும் பச்சைக்கொடி காட்டுகிறது. சென்னையில் அமைய இருக்கும் உருது பல்கலைக்கழகத்தில் இந்தியும்.ஆங்கிலமுந்தான் கட்டாயப் பாடங்களாம். இவ்வாறு அடுக்கும் அளவில் இந்தி வாலாட்டம் தலையாட்டமாகி வருகிறது.

இவற்றிற்கெல்லாம் மேலாகப் பிஞ்சுள்ளங்கள் பயிலும் மழலையர் பள்ளிகளில் முதல்வகுப்பிலேயே ஆங்கிலம்,தமிழுடன் இந்தியும்கட்டாயமாகவே இடம்பெற்றுநடைமுறையில் உள்ளது.இதுஇருமொழிப்பாடத்திட்டக் கொள்கை உள்ள அரசின்கீழ்நிகழும் கழுத்தறுப்பு வேலை.

இந்நாளில் அடிகளார் இருந்தால் தம் பங்களிப்பைச் செய்ய முன் வந்திருப்பார். அவர் பெயரால் அறக்கட்டளைச் சொற்பொழிவிற்கு வழிவகுத்திருக்கின்ற டாக்டர் கலைஞர் கருணாநிதிதான் இன்று பெரியார் உணர்விலும், அண்ணா இடத்திலும் அமைந்து இந்தி மேலாண்மையை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார். மறைமலையடிகளார் பெயரால் தமிழர் அனைவரும் மொழிநலம், இனநலம் கருதி இந்நிலையை எதிர்த்துச் சூளுரை எடுத்து எதிர்க்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை அடிகளார் நினைவு பற்றிய சொற்பொழிவில் நின்று குறிக்க வேண்டியனா கின்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/106&oldid=687174" இலிருந்து மீள்விக்கப்பட்டது