பக்கம்:தமிழ்மாலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I ()3

அடிகளார்க்குப்பின்னர் கட்டுரைத் தொகுப்பொன்று மறைமலையடிகள் கருத்தோவியம்’ என்று வெளிவந்துள்ளது. இவை நான்கும் பொதுவான நற்கருத்துக்கள் கொண்டவை. இதுபோன்று பல்வகைப்பொதுக்கட்டுரைகளைக் கொண்ட மறைமலையடிகளார் உரைமணிக்கோவை என்னும் தொகுப்புநூலும், அறிவுரைக் கொத்து என்னும் தொகுப்புநூலும் வெளிவந்துள்ளன.இவ்வாறு பொதுவியல் பங்கில் வெளிவந்துள்ள 6 நூல்களும் எளிதாகப் படிக்கவும் பயிலவும், ஆராயவும், கடைப்பிடிக்கவும் துணைநிற்பவை.

16. வரைவியல் (இரண்டு வகை நூல்கள்)

அடிகளார் எழுதிய முடங்கல்களும், இவர் நாள்தோறும் தவறாமல் குறித்தெழுதியநாட்குறிப்பும் இவ்வரைவியல் பங்குகள்.முடங்கல் உள்ளத்துடன் உறவாடும், அன்பைப் பரிமாறும், கருத்தை அதிகரிக்கும் பதிவு வரைவுகள். நாட்குறிப்பு அன்றன்றைய நடப்பவரைவுகள். எனவே இவை வரைவியல் எனத் தக்கவை. இவையிரண்டும் உணர்வு வெளிப்பாட்டுக் கல்வெட்டுக்கள்; வாழ்வியல் நடப்பியல் பதிவுச் சுவடுகள். இரண்டிலும் எழுதியோர் இயல்புகளையும், அறிவார்ந்தநடப்புகளையும் காணலாம்.

பல செய்திகளையும் கருத்துக்களையும் தொகுப்பதை ஆர்வமாகக் கொண்டு அதையோர் சுவையாகக் கொண்ட திரு அன்புப்பழம் நீ என்னும் அன்பில் பழம்'மறைமலையடிகளார் கடிதங்கள் என்றொரு நூலைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். அதில் அடிகளார் நாட்குறிப்பில் குறிப்பிட வேண்டிய சில குறிப்புக்களையும் சேர்த்துள்ளார். பன்மொழிப்புலவர் திரு. மு. சதாசிவம் அவர்கள் "அடிகளார் நாட்குறிப்பெழுதும் திறம் என்றொரு கட்டுரை எழுதியுள்ளார். சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் 'மறைமலைடிகளார்நாட்குறிப்புகள் என்றொருநூலைப்பதிப்பித்துள்ளார்.

அடிகளாரின் முடங்கல்கள் அடிகளாரின் உணர்வுகளை, நடைமுறைகளை, ஆர்வங்களை நூற்படிப்பை,மனக்கனல்களை,தொண்டுகளை, எழுத்துப் பணிகளை அவர் தம் கையாலேயே எழுத்துவடிவில் காணும் வாய்ப்பினை நல்குகின்றன.

ஆங்கிலத்தில் குறிப்பு -

முத்துச்சாதி போன்ற எழுத்தமைப்பும், முத்துச் சீரான வரிக்குவரி இடைவெளியமைப்பும் இவரது. எழுத்தழகில் அடிகளார்தம் கைச்சான்று ஒரு தனி எழிலானது. மறை என்பதில் அமைந்த ற எழுத்தில் கீழிறக்கம் நீண்டு வளைவு வேரைப் பெற்றிருப்பதும் கைப்பழக்கமாகிப்போனவை.

அஞ்சலட்டைகளை மிகப்பலர் படிக்காதிருக்க ஆங்கிலத்திலும், உறைகளைத் தமிழிலும் எழுதுவதாகக் குறித்துள்ள அடிகளார் தமிழிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/110&oldid=687178" இலிருந்து மீள்விக்கப்பட்டது