பக்கம்:தமிழ்மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

வேதாசலத்தின் மதிநுட்பத்தை உரையாடி அறிந்தார். அவர் கற்பிப்பில் இலக்கண இலக்கியப் புலமை பெற்றார். -

“எனது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப்

பயிற்சியானது எனது இருபத்தோராம் ஆண்டில் பெரும்பாலும்

நிரம்பியதென்னலாம்” என்று திருவளர் வேதாசலம் எழுதியதுபோன்று ஆறு ஆண்டுகளில் தமிழ்க்கல்வி நிறைவானது. தாமே முயன்று வடமொழியைக் கற்றார். மொழிபெயர்க்கும் திறனளவில் வடமொழிப்புலமை அமைந்தது. விரைந்து பயிலவும் ஆற்றொழுக்காகப் பேசவும், உரையாடவும், தெளிவுற எழுதவும் ஆங்கில அறிவு பெற்றார்.

இலக்கணப் புலவர் திரு வே. நாராயணசாமி பிள்ளையவர்களிடம்

மனோன்மணியம் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை தமிழ் பயின்றார்.அவரது நாகை வருகையால் திருவளர் வேதாசலம் அவருக்கு நண்பரானார்.

நாகையில் சிலமுறை'சைவப் பொழிவின் சண்டமாருதம் எனப் புகழ்பெற்ற சைவத்திரு சோமசுந்தர நாயக்கர்பால் மனந்தோய்ந்து சைவக்கோட்பாட்டறிவினை நிறைவாக்கிக் கொண்டார். நாளும் அவர் நினைவில் நின்று போற்றியிசைக்கும் கடமையையும் மேற்கொண்டார்.

நாகையில் இளமையிலேயே இந்து மதாபிமான சங்கம்’ என்னும் ஒன்றை நிறுவித் தாம் தலைவராக அமர்ந்து கிழமைதோறும் சொற்பொழிவாற்றினார் (திருவளர் வேதாசலத்தின் விரைந்த கல்வி முன்னேற்றத்தைக் குறிக்கும் விரைவில் அவர் தம் இல்லற அமைவு பற்றிக் குறிப்பது இடையீடுபடுவது இயல்பே).

இல்லறப்பாங்கு

12 அகவைச் சிறுமப் பருவத்தில் தந்தையை இழந்த வேதாசலத்திற்குத் தாய் சின்னம்மை 16 அகவையில் திருமணம் முடித்தார். சங்ககாலத் திருமண அகவையும் 16 ஆக இருந்தமை இங்கும் எதிர்ப்ாராமல் பொருந்துகின்றது. திருவளர் வேதாசலம் தன் மாமன் மகள் சவுந்தரத்தை விரும்பியேற்றுத் திரு வேதாசலமானவர் 17ஆவது அகவையில் தந்தையுமானார். 16-இல் தொடங்கிய தமிழ்க்கல்வி" என்றாரே அது இப்பதினேழில் காப்பிய இலக்கியங்களில் ஊன்றிநின்றது. சீவக சிந்தாமணியில் திளைத்திருந்த காலப்பருவத்தில் பிறந்த முதல் மகளுக்குச் சிந்தாமணி என்று பெயரிட்டார்.

மனோன்மணியம் சுந்தரனார் நட்பாலும், ஆசிரியர் சோமசுந்தரர் அழைப்பாலும் சென்னையைச் சேர்ந்த திரு. வேதாசலம் தமிழ்ப் பேராசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/14&oldid=687074" இலிருந்து மீள்விக்கப்பட்டது