பக்கம்:தமிழ்மாலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

ஆயிற்று.இப்போதும் நாட்டு உட்பகுதியில் மீன்பிடிப்போர் இவ்வினத்தவராகக் குறிக்கப்படுவர். நீலகிரி மலைப்பகுதியில் படகர்” எனக்குறிக்கப்பெறும் பழங்குடியினர் வாழ்கின்றனர். தென்னிந்திய குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்தெழுதிய எட்கர் தர்ஃச்டன் என்பார். . . . . - “படகன் அல்லது வடுகன் என்ற சொல் வடக்கத்தியான் என்று பொருள்படும். படகர்கள் கன்னடப் பகுதியிலிருந்து வந்து குடிபுகுந்த மைசூராரின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்படுகின்றது” - என்றுவிளக்கினார்.இப்படகர் படகுத் தொடர்புடைய படகர் அல்லர்.

அவ்வறிஞரே, - -

“பகடர், பாக்டார். பக்டா எனப் பலவாறாக வழங்கப்பெறும் தெலுங்கர்களாகிய இவர்கள் உள்நாட்டில் மீன்பிடிப்பவர்கள். நீண்ட ஈட்டிகொண்டு மீன்பிடிப்பதில் திறமை மிக்கவர்கள் என்று இவர்களைப்பற்றிக் கூறுப்படுகிறது" - என்று மற்றொரு வகை இனத்தவரைப் பகடர் என்று குறிப்பிடுகின்றார். இன்னோர், படகுகொண்டு மீன்பிடிக்கவில்லையாயினும் படகுகொண்டு மீன்பிடிப்போரின் இனத்தவரே. ஆனால் தெலுங்கர் எனல் பொருந்தாது. பகடர் என்பது படகர் என்பதன் திரியே. நாகைப்பகுதியிலும் கீழைக்கடற்கரைப் பகுதியிலும் வாழும் படகர் தொன்மைத்தமிழகத்து நெய்தல்நில மக்களாகக் குறிக்கப்படும்பரதவராவர்.

இளைஞர் வேதாசலமாக 15 அகவையில் தமிழ் கற்கத் தொடங்கிய காலத்தில் தமிழ் மக்களின் மரபு, பண்பாடு முதலியவற்றில் கருத்துன்றியவர் இக்கடற்கரைவாழ் மக்களை நெய்தல் நில மக்கள் எனும் தமிழ்நோக்கில் கண்டார். - . . . . . . - - காற்றைப் பிடித்துக் கையில் அடக்கி. -

இன்னோர் இக்காலத்திலும் கொள்ளும் பழக்கவழக்கங்கள் சொல்லாட்சிகள் கடல்நிலையறிந்த அறிவாற்றல்கள் இவர்களைத் தமிழ்நிலப் பாகுபாடாகிய நெய்தல் நிலத் தமிழர்களாகவே காட்டுகின்றது. இன்றும் மகளிரும் குழந்தைகளுங்கூட"அகழ்தல்"என்னும் தமிழ் ஒலிப்புச் சொல்லைப் பிறழாது வழங்குவதைக் காணலாம். காற்றைத் தன்வயமாக்கிக் கலஞ்செலுத்திய சோழ மன்னனை வளிதொழிலாண்ட உரவோன்" என்று புறம் குறிக்கும். இன்னோர் படகுகளைக் கடலில் செலுத்தும் திறனைப் பார்த்தால் காற்றைத் தம்வயப்படுத்திச் செயற்படும் வயத்தகு திறனைக் காணலாம். வேறுவகையில் காற்றைக் கொண்டுவானிலையை அறியும் திறன் ஒன்றைநான் கண்டுள்ளேன். r - - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/18&oldid=687078" இலிருந்து மீள்விக்கப்பட்டது