பக்கம்:தமிழ்மாலை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 ()

கடவுட்கொள்கை, சமயக்கருத்துக்களில் மாற்று முனைகளில் நின்ற பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் அடிகளாரை மிகப் போற்றியதும், அடிகள் என் வலக்கை என்றதும், அடிகளாரின் தமிழின ஊற்றத்தின் முத்திரை எனலாம். கடவுட்கொள்கையில் ஊறிநின்ற அடிகளார்.அக்கொள்கையைத்தகர்க்கநின்ற பெரியார் அவர்களைத் தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் பார்வையாளராகக் கண்டபோது அவரை மேடைக்கழைக்கப் பெரியார் அடக்க உணர்வால் முன்னே அமர்ந்தமையும் இத்தொடர்பில் நினைவுகூர்தற்குரியது. இத்தொடர்பு இந்தி எதிர்ப்பியக்கத்தில் இறுகியது.

அடிகளார் தம் ஊற்றப்பதிவத்தில் மற்றொன்றைக் குறிப்பிடவேண்டும். அது அடிகளாரின் கம்பராமாயணக் கண்டனம்.

இலக்கியங்களை அது தமிழ் இலக்கியமாயினும், வடமொழி, ஆங்கில இலக்கியங்களாயினும் மதித்துப் போற்றிப் பயின்ற அடிகளார் அதனினும் ஒரு வரையறை கொண்டார்.உண்மைக்கு மாறான பொய்க்கதைகள் கொண்டவை தமிழகத்திற்குத் தாழ்வு காட்டுபவை என்ற குறிப்பில் பல தமிழ் இலக்கியங்களையும் ஒதுக்கினார்; மறுத்தார்; கண்டித்தார். அவற்றுள் ஒன்று கம்பராமாயணம், அது வைணவ சமயக் கதைகொண்டது என்பதால் கண்டிக்கவில்லை. அக்கதை மெய்யற்றது; கற்பனை: கற்பனையிலும் திராவிடரைத் தாழ்வுபடுத்துவது; தமிழ் இனத்தாரைக் குரங்குகளாகப் பேசுவது; மூல முதற் கடவுள் வழிபாட்டை மறக்கச் செய்வது` எனும் கோட்பாட்டில்தான் கண்டித்தார்.

அடிகளார் சைவ சமயத்தில் ஊன்றி நின்றவராயினும் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதலிய குறிப்பிடத்தக்க தமிழ் வைணவ நூல்களின் திறத்தைச் சுவைத்துள்ளார்; ஓரளவில் பாராட்டியும் உள்ளார். சைவ நூல் என்பதற்காக அது பொய்க்கதைகளை கட்டிக் கூறுவதாயின் வெறுத்து ஒதுக்கினார். கச்சியப்பர் என்னும் சைவப் பெரியாரால் எழுதப்பட்டுத் தமிழ்ச் சைவர்களாலும் பிறராலும் விரும்பியும் போற்றியும் படிக்கப்பெற்ற கந்தபுராணத்தை அடிகளார் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. “கந்தபுராணப் புளுகு” என்றொரு நாட்டு வழக்கே உண்டு. அது முருகனைப் பற்றிய கதைகொண்டதாயினும், அதில் கட்டுக்கதையே வளர்கின்றது. இதனால் தேர்ந்த நூலன்று என்பதே அடிகளார் கருத்து. இதனை வெளிப்படையாகச் சொல்லவும், எழுதவும், நேரம் வாய்க்கும்போது சொற்பொழிவில்குறிக்கவும் தயங்கவில்லை.அதிலும் தமிழினத்தைத்தாழ்த்தும் குறிகள் உண்டு என்றே அதனை ஒதுக்கினார். இதுபோன்றே கம்பராமாயணத்தையும் கண்டித்தார். இஃதும் அடிகளாரது தமிழின ஊற்றத்தின் பதிவேயாகும். இவ்வூற்றத்திற்கு நிறைவாக ஒன்றைக் குறிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/27&oldid=687087" இலிருந்து மீள்விக்கப்பட்டது