பக்கம்:தமிழ்மாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

மயிலின் உருவகமாகக் கொண்டு அதன் மையத்தில் தோன்றுவதால் மயில் முருகனின் ஊர்தி எனப்பெற்றது.விடியலில் கதிரவன் தோன்றுவதற்குமுன்னர் அதன் அறிவிப்பாகச் சேவல் கூவுவதால் அச்சேவல் அவன்தன் கொடிச் சின்னமாயிற்று' இவ்வாறெல்லாம் வர்ணிக்கின்றவர் முருகனின் ஆறு தலையமைப்பிற்கும் அவ்வாறே அமைதி சொன்னார்.

இங்கு பாவேந்தர் பாரதிதாசனார் நினைவிற்கு வருகின்றார். இவர் இராமாயணக்கதையில் வரும் இராவணனை,"என்தமிழர் மூதாதைஎன்றமிழர் பெருமான் இராவணன்காண்” என்றுபாடியவர்.அவரே இராவணனின் பத்துத் தலைக் கருத்தினை ஒரு பேச்சிற்காக ஏற்று அதற்கொரு விளக்கம்போல், “ஐயிரண்டு திசைமுகத்தும் தன்புகழை வைத்தோன்" என்றும் பாடியுள்ளார். 'மூலைத்திக்குகளோடு கூடிய எட்டு திக்கொடு வானம்,நிலம் என்னும் மேல், கீழ்களையும் திக்குகளாகக் கொண்டு பத்துத் திக்குகளிலும் தன் புகழாகிய முகத்தை வைத்தவன் என்றார்.

அடிகளார்முருகனுக்குக் கூறிய ஆறும் இவ்வாறே அமைந்தது. நான்கு திக்குகளுடன் மேல், கீழ்கள் சேர ஆறுமுகத்தும் நிறைந்திருப்பதால் அதனை ஆறுதலைகள்' என்று உருவகமாக்கினார்.இஃது ஒர் உருவத்திற்கு மற்றொரு உருவத்தைக் காட்டும் உருவகம். அல்லது அருவகத்திற்குக் காட்டப்பெற்ற உருவகம்போலும்,

ஆனால், ஆறுமுகத்திற்குப்பன்னிரண்டுகைகள் கதிரவனின் பன்னிரு திங்கள் கதிர்கள் என்று நாம் கொள்ள வேண்டும் போலும் கொண்டாலும் முருகனது புகழ்பெற்ற தனி உரிமையுடையதாகிய வேற்படைநம்மால் ஆய்ந்து கொள்ள வேண்டியது என்று பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்திருப்பதாகக் கொள்ள வேண்டும்.

காலைக் கதிரொளியாக உருவகப்படுத்தும் அடிகளார்.அது இளஞாயிறு என்பதற்கு "பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு" என்று.நக்கீரர் காலையைக் குறிப்பாகவைத்ததையும் சான்றாக்கினார்.

இவ்வாறு ஆறு தலை கொள்ளாமல் அருவமாகவே முருகனைக் கொண்டு உருவகத்தை இயற்கைக் காட்சியாக வைத்துப் பார்த்தவராதலால் பாளைக் கூட்டத்தில் கிண்டலுக்கு ஆளான முருகனைப் பற்றியதைத் தாழ்வாக்கிய உணர்வாக அடிகளார்க்குப்படவில்லை.இவ்வாறு நன்றிகூறலில் முருகனையும் கிண்டலில் வைத்த இளைஞரும் சைவப்பெரும்பற்றினரே. ஆனால், கம்பராமாயணத்தில் தோய்ந்து அதைப் போற்றியவர். அவர்தாம் பிற்காலத்தில் நம் காலத்தில் சொல்லின் செல்வர் எனப் புகழ்பெற்ற திரு இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களாவர்.இந்நிகழ்ச்சியைச்சொல்லின் செல்வரே என்னிடம் சொல்லியதை இதுபோது நினைவுகூர நேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/44&oldid=687104" இலிருந்து மீள்விக்கப்பட்டது