பக்கம்:தமிழ்மாலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நாகையால் ஒரு மலை

அ.நா.கை

நாகர்பட்டினம் என்று வழங்கப்பெறும் நாகப்பட்டினம் மறைமலையடிகளார்க்குச் சிலையமைத்துச் சிறந்தது. மறைமலையடிகளார் நாகையில் சிலையாக அமைந்து திகழ்கிறார். ஏன் நாகையில் சிலையாக அமர்ந்தார்? தமிழ்கூறும் நல்லுலகிற்கு அடிகளாரை அவர் பிறப்பால் வழங்கியதால் அந்நகர் மக்கள் சிலையாக அவர் தம்மிடம் நிலையாக அமர்ந்திருக்கச் செய்தனர். பிறந்த ஒரு காரணத்திற்காகச் சிலையா? அவ்வாறானால் அங்கு பிறந்தோர்க் கெல்லாம் சிலை எடுப்பதா? அப்படிச் செய்யவில்லை. சிலையெடுப்பிற்குக்காரணங்கள் உள்ளன.அக்காரணங்களை நிலையாகத் தாங்கி நிற்கும் அடித்தளக் கருங்கற் பீடம் சொல்கிறது. பாடிச் சொல்கிறது. .

சிலைப்பீடத்தின் வடபுறத்துப் பதிந்துள்ள வெண்மெருகுக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ள பாடல் இது:

"நாகையில் பிறப்பை வைத்தார்;

நா, கை யில் தமிழை வைத்தார்; ஒகையில் துறவை வைத்தார்;

ஒளியினில் இறைமை வைத்தார்; வாகையில் வாழ்வை வைத்தார்,

வகைவகை நூல்கள் வைத்தார். ஆகையால் சிலையை வைத்தோம்;

அவர்நெறி செயலில் வைப்பீர்”. இப்புகழ்பாடலை எழுதியவன் பெயர் பாடலின் கீழே பொறிக்கப் பட்டுள்ளது. அன்று அடிகளார் புகழ் பாடியவன் இன்றும் உங்கள் முன்னே அவரது புகழ்பேசிக் கொண்டிருக்கிறான். -

நாகர்பட்டினத்தின் சுருக்கச் சொல் நாகை அது மறைமலையடிகளார் திறன்களின் மாணிக்கச் சுருக்கமுமாகும். அதைத்தான் மேற்பாடலின் இரண்டாம் அடிநா.கையில்தமிழைவைத்தார்”என்கிறது.அடிகளார்திறன்கள் சொற்பொழிவுப் பேச்சாலும், நூல்களின் எழுத்தாலும் பளிச்சிட்டன. நாவால் பேசினார். பொழிந்தார்: முழங்கினார் கையால் எழுதினார் விளக்கினார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/50&oldid=687110" இலிருந்து மீள்விக்கப்பட்டது