பக்கம்:தமிழ்மாலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

"மறைமலை என்னில் இன்ப

மங்கல யாழி சைக்கும்' "

என்று பாடினார். இன்பந்தரும் என்றும் மங்கலம் எழும் என்றும் யாழ் இசைக்கும் என்றும் அடுக்கியமை முற்றிலும் உண்மையில் படப்பிடிப்பே. அவர் இன்பம் எழும் என்றதற்கேற்ப அடிகளார் பொழிவைக் கேட்ட மேடையிலேயே, பதிப்பு வேந்தர் உ.வே.சா. அவர்கள் சொற்பொழிவில் மூழ்கிவிட்டேன் என்று மட்டும் சொல்லாமல் "சொற்பொழிவு இன்பத்தில்" என்றார். அடுத்த தொடராக "அவர் இனிய பேச்சொலி என் இரண்டு செவிகளிலும் முழக்கம் செய்கின்றன” என்று கூற எண்ணியவர், "இரண்டு செவிகளிலும் முழக்கம்" என்றார். இவ்வாறே பலரும் அடிகளார் குரலினிமையை, ஒலியின்பத்தைக் குறித்தே பேசினர். பண்டைத் தமிழ்ச் சான்றோர் கழாரம்பர் என்பார் தாம் எழுதிய பேரிசை என்னும் நூலில் தமிழின் பொருளைக் குறிப்பிட முனைந்தவர், “தமிழ் சிவம், இனிமை என்னும் தனிப்பொருளாம்” என்றார். உண்மையாகவே மறைமலையடிகளாரின் தமிழ் இதற்கு இலக்கியம் என்று அழுத்தமான குரலில் குறிக்கலாம். இவர் தமிழ் இனிமை, இவர் சைவம் இல்லை. இவர்தம் பேச்சினிமை, தமிழின் இசையில் தொடங்கி சைவக் கூவலாக ஒலித்தது. இக்குரலினிமைத் தமிழைக் கேட்பதே ஒர் அருமை வாய்ப்பு அவ்வினிமைக் குரலும் இவர் தமிழ் பரவியமைக்கு ஒரு தளம். இதனை அறிந்து உணர்ந்த கவியோகி சுத்தானந்த பாரதியார்,

"மெல்லிசைக் குயிலைப் போலே

மிழற்றிடும் தமிழைக் கேட்டால் நல்லிசை உலக மெல்லாம்

தமிழையே நயந்து க்ேட்கும்' "

என்று பாடிய ஒவ்வொருசொல்லும் மாறாத பொருள் தொடர்புடன் அடிகளாரை அடையாளங் காட்டுகின்றது. ஒர்ந்து, தேர்ந்து சொற்களைக் கவியோகி பெய்திருக்கிறார் என்று உறுதிபடக் கூறலாம்.

அவையின் மேடையில் அவர்தம் அமைதி தழுவிய மிடுக்காாந்த தோற்றத்தில் கண்ணுான்றிக் கவனத்தைப் பதித்திருப்பர் அவையோர். அந்நிலையில் இவர் குரல் ஒலிக்கத் தொடங்கியதும் ஒரு புதுமைக் கவர்ச்சி அலைபாயும். இனிமையான அக்குரல் சற்றுத் தணிவாக அமைந்ததால் அவையோர் கவனம் வைத்துக் கூர்ந்து செவிமடுக்க முந்துவர். இவ்வகையிலும் இவர் பொழிவிற்கு ஒரு பெருமை முன்னோட்டம் அமைந்தது. இவற்றைத் தொடர்ந்து இவர் அமைத்துக் கொண் பொழி , முறைகள் இவரை மேடையில் ஆட்சி செய்ய வைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/54&oldid=687114" இலிருந்து மீள்விக்கப்பட்டது