பக்கம்:தமிழ்மாலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

புன்முறுவல்பூத்தவாறே அமர்ந்திருந்தார் என்று அவர் மகனார் எழுதியுள்ளார். மேலும் அடிகளார்முடிவுரை சொல்லும் போதுமன்றத்திலுள்ளவர்கள் அடிகளார் இதுபற்றி என்ன சொல்லப்போகிறார்; எப்படிநடந்துகொள்ளப்போகிறார் என்று எண்ணியிருந்தபோது பேச்சில் தொடர்பில்பேசவேண்டியவற்றையே விலக்கிச் சென்ற அடிகளார் அப்புலவர் பேச்சில் சொன்னவற்றில் சிலவற்றை ஏற்றும் பேசி, கண்டித்த கிராப்பற்றி புன்முறுவலுடன் புலவரின் மயிர் ஆராய்ச்சி மிக நன்று”என்று நயத்தோடுமுடித்தார்.அவையோர்க்கு இது சுவையாகவும் இவர் பெருந்தகவை உணர்த்துவதாகவும் இருந்தது. இஃதொரு மலிவான நகைச்சுவை என்றாலும் அதில் சிறிது கிண்டல் இருந்தாலும் சினம் கொள்ளாமல் அதனைப் பெரிதாகக் கொள்ளாமல் தொட்டது சிறப்பாகவே அமைந்தது என்று இவர் மகனார் புலவர் மறைதிருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

தமிழில் பொழிவுத்திறன் பெற்றிருந்தமை போன்றே ஆங்கிலத்திலும் சிறப்பான ஆங்கிலச் சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். சென்னை பெசண்டு கழகத்தில் சாங்கியமும் சித்தாந்தமும் என்பது பற்றி இரண்டு மணியளவில் உயர்ந்த ஆங்கில நடையில்உரையாற்றினார்.இக்கழகம் தேர்ந்த ஆங்கில அறிவும்,ஆன்மிகஉணர்வும் கொண்டவர்கள் கூடும் அவை.இப்பேச்சு மிகவும் போற்றப்பட்டதாம். மேலும் சில மன்றங்களிலும் ஆங்கிலப்பேச்சு அமைந்துள்ளது. வடபுல பயணத்தின்போது கல்கத்தா சைவ சித்தாந்த சபையிலும் மற்றும் சில நகர்களிலும் ஆங்கிலச் சொற்பொழிவு ஆற்றிப் புகழுரை பெற்று வந்தார். .

மேடைக்குரிய அனைத்துத் துறைகளிலும் தம் முத்திரையைப் பதிப்பித்தார் அடிகளார். இவர்தம் பொழிவுத் திறத்தையெல்லாம் ஒன்றுகூட்டி ஒருங்கிணைத்தால், -

அறிவு என்னும் ஊற்றுக்கண்ணும், சொற் பொழிவு என்னும் அருவியும்,

நறுங்கருத்துத் தேக்கம் என்னும் சுனை, மடமைப் பிணிபோக்கும் மூலிகைகளும், - தமிழ் மணமும் சைவப்பெருமையும் என்னும் அகிலும் சந்தனமும், கருத்துறுதி என்னும் தேக்கம், நயங்கள் சுவைகள் என்னும் தேனும் பலாவும்,

குரலென்னும் குயிலும், பளிச்சென்று கருத்தை எடுத்து நீட்டும் தந்தமுள்ள யானைகளும், -

அகழ்ந்தெடுத்த ஆய்வு முடிவுகள் என்னும் மாணிக்க வைரங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/59&oldid=687119" இலிருந்து மீள்விக்கப்பட்டது