பக்கம்:தமிழ்மாலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

என்பதற்கு எழுதும் செயல் என்பதுடன் "எழுதும் ஒழுக்கம்’ என்பதும் ஆழ்பொருள்.இப்பொருள் எழுத்தில் நல்லியல்பைக்குறிப்பாக அறிவிக்கின்றது. நாவால் மலையான அடிகள்ார் கையாலும் மலையாவதற்கு எழுத்துப் பணியை ஒர் ஒழுக்கமாகக் கொண்டார். தாம் எழுதும் இயல்பு பற்றி அவரே குறிக்கின்றார்.

“யாம் எழுதும் நூல் ஒவ்வொன்றும் பன்னாளும் பலமுறையும் ஆய்ந்தாய்ந்து எழுதப்படுவது, யாம் எழுதுவது எம் உள்ளத்திற்கு இனிமை தரும் வரையில் எமதறிவிற்குப் பொருத்தமாகக் காணப்படும் வரையில் அவற்றைப் பல்முறையும் நினைந்து நினைந்து விரையாமல் மெல்லென எழுதுதலே எமக்கு வேரூன்றிய இயற்கையாகிவிட்டது

அடிகளார் கடைப்பிடித்த எழுத்து நெறியின் விளக்கம் இது. பன்னாளும் பலமுறை ஆய்வார்; ஆய்ந்தாய்ந்து எழுதுவார்; உள்ளத்திற்கு இனிமைதரும் வரை நினைந்து பார்ப்பார்; அறிவிற்குப் பொருத்தமாகும்வரை நினைந்து தினைந்து பாாபபாா; விரைந்து எழுதமாட்டார்; மெல்லென எழுதுவார். - - இவையெல்லர்ம் இவருக்கு இயற்கை வேரூன்றிய இயற்கை மீண்டும் இக்கருத்துக்களைப் பிரித்துப் பிரித்துக் காட்டியதன் நோக்கம் எழுத்தில் எத்துன்ன கவனமும் ஒழுங்கும் கொண்டு இயங்கியுள்ளார் என்பதைப் பளிச்சிட்டுக் காட்டவே எழுதுவதற்கு முன் கருத்துக்களை ஆய்ந்தாய்ந்து மீண்டும் நினைந்து நினைந்து உணர்விற்கும் அறிவிற்கும் பொருந்தக் கண்டு நிறைவேற்றுகின்றார் என்றால் படிப்போரின் ஏற்பையும் எண்ணிப் பார்த்துள்ளார். இவ்வாறு எழுதுவது இக்காலத்திற்கு எவ்வகையிலும் பொருந்தும் என்று.சொல்ல இயலாது. விரைவும், பக்க நிறைப்பும், பொழுது போக்கு நோக்கமும் கொண்ட எழுத்துக்கு இவை பொருந்தா. இவ்வாறு அடுக்கியதகவுகள் அடிகளார் தமக்குஇயல்பான செயலாகிவிட்டது என்கிறார். இயற்கைஎன்பதிலும் ஒருகை இருக்கிறது.அதனால் இயற்கைக்கு இயல்பான செயல் என்றும் பொருள். இயல்பான ஒழுக்கம் என்றும் பொருள். எனவே, அடிகளார்க்கு எழுத்துப்பணி ஒரு செயலாக மட்டும் இல்லை; ஒழுக்கமாகவும் இருந்திருக்கிறது.இவ்வொழுக்கம் தம் அடித்தளத்தில் இறுகிய பிடிப்பாகவும்,

ஊற்றாகும் கருத்துக்களை வாங்கித் தரும் வேராகவும் அமைந்திருக்கிறது.

எனலாம்.

இவ்வகை இலக்கணத்துடன் அடிகளார் எழுத்துலக இலக்கியமாக நூல்களைப் படைத்துள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/62&oldid=687122" இலிருந்து மீள்விக்கப்பட்டது