பக்கம்:தமிழ்மாலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

என்று நான்காகக் கொள்ளலாம். இவ்வொவ்வொன்றிலும் உள்ள நூல்களைக் கருத்தளவில் இயல்களாக வகைசெய்தால் பின்வரும் 16இயல்களாகும்:

இயல் நூல்கள் இயல் நூல்க்ள் 1 கோட்பாட்டியல் - 4 9. குமுகாயவியல் - 9 2. உரையியல் - 6 10. புதினவியல் - 2 3. பாடலியல் - 2 11. வாழ்வியல் - 2 4 அளவையியல் - 3 12. மொழியியல் - 3 5. சமயவியல் - 9 13. அரசியல் - 2 6. ஆய்வியல் - 6 14. வரலாற்றியல் - 3 7. நாடகவியல் - 2. 15. பொதுவியல் - 6 8. உளவியல் - 4 16 வரைவியல் - 2 .

65

16 இயல்களையும் வரிச்ைப்படுத்தியிருப்பதும் ஒரு கருத்தைக் கொண் டது. அடிகளாரின் நூல்கள் பதிப்பான ஆண்டுவாரியில் இவ்வியல்களின் நூல்கள் உருவானமையைக் காட்டவே பதிப்புக் காலவரிசையில் இவ்வியல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. - -

இதுகொண்டு அடிகளார் எவ்வெக்காலத்து நூலாக்கத்தில் எவ்வெவ்வகை உணர்வில் இருந்தார் என்பதை உணரலாம். இஃது ஒராசிரியரின் உணர்வோட்டத்தின் அறிவோட்டத்தின் அறிகுறிமட்டுமன்று; வாழ்வோட்டத்தின் வெளிப்பாடும் ஆகும். -

இவர்தம் நூல்களில் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புள்ளது. ஒவ்வொன்றும் எழுத்துருவாக்கம் அன்று கருத்துருவாக்கம். எந்த நூலிலும் எந்த ஒரு வரியையும் விட்டுப்படிக்கவோ, பக்கத்தைப் புரட்டிச்சொல்லவேர் இயலாது கருத்துவிடுபட்டுப்போகும்.இவ்வகையில் அடிகள்ர்தம் ஒவ்வொரு நூலும் தனித்தனியே நோட்டமிட்டுக் கருத்து நோட்டம் பேசப்பட வேண்டியது. எழுதப்படவேண்டியது. . . .

இவ்வறக்கட்டளையில் இப்பொழிவு, முதற் சொற்பொழிவு, மறைமலையடிகளார் பற்றியதாக அமைந்துள்ளது. தொடர்ந்து அடிகளார்பற்றிய பொழிவுகள் நிகழும். அவற்றிற்கெல்லாம் இது முன்னோட்டமாகவும் ஒரு தொகுப்பான பதிகமாகவும் அமைய வேண்டும் என்று கருதினேன். t

எனவே, ஒவ்வொரு நூலாக எடுத்துக் கருத்து நோட்டம் செய்யாமல் மேலே வகுத்துககொண்ட இயல்வகையில் அவ்வவ்வியலில் அடங்கும் நூல்களின் பொதுத் திறனாய்வாகச் செய்வது இப்பொழிவிற்குப் பொருந்தும். இவ்வகையில் 18 இயல் நூல்களின் 16 தனித்தனித் திறனாய்வாக இது. அமையும் - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/68&oldid=687136" இலிருந்து மீள்விக்கப்பட்டது