பக்கம்:தமிழ்மாலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

3.

அடிப்படையில் என்று முன்னர் குறிக்கப்பட்டது. அதன்படி கோட்டிபாட்டியல் நூல்கள் தாம் முதலில் திறனாய்வு செய்யப் பெற வேண்டும். ஆனால், இங்கு முதலில் வாழ்வியல் நூல்களை எடுத்துள்ளேன். பட்டியலில் 11ஆம் இயலாக உள்ளதை உருவி எடுத்து முதன்மை கொடுத்துள்ளதற்குக் காரணம் அதன் முதன்மை கருதியதேயாகும். அடிகளார் எழுதிய வாழ்வியல்நூல்கள் இரண்டு. ஒன்று பொருந்தும் உணவும் பொருந்தா உணவும். இரண்டு, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை.இவை இரண்டுமே அடிகளார் படைத்தநூல்களில் முதன்மைத் தகுதி உடையவை. பலவகையில் இவற்றிற்கு முதன்மைத் தகுதி உண்டு. அடிகளார் நூல்கள் அனைத்துமே கருத்துச் செறிவும் பயனும் உள்ளவைதாம். அவற்றுள்ளும் இவையிரண்டும் படிப்போர்க்கு முதன்மையாக வேண்டப்படுபவை. மக்கட்கு வாழ்வைச் சீராக்கிக் கொள்வதுதான் முதன்மை, அதற்கு இவ்விருநூல்களும் முதன்மைத்துணைகள்.அடிகளது மிகுஉழைப்பில் 24 ஆண்டுகள் முயன்று 1909-இல் எழுதத்துவங்கிஅவர்தம் இதழான அக்கால ஞானசாகரத்தில் தொடர்ந்தும் அவ்வப்போதும் வெளிவந்து1933-இல் மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை முழு நூலாகப் பதிப்பாயிற்று. பிற நூல்கள் இத்துணை உழைப்பைக் கொள்ளாத வகையில் இதற்கொரு முதன்மை அமைகின்றது. தமிழில் இத்தகைய வாழ்வியல் நூல் முதலாவது முதன்மை கொண்டது. தமிழ் நூல்களின் ஆழமான வாழ்வியல் கருத்துக்களுடன் மேலைநாட்டு ஆய்வாளர் பலரது முடிவுகளை அதிகம் மேற்கோளாகக் கொண்ட வகையிலும் முதன்மை கொள்வது. எனவே வாழ்வியலை முதலில் எடுத்தது. பொருத்தமாகின்றது.

இரண்டு நூல்களும் தனித்தனியே பதிப்பாகியிருப்பினும் ஒன்றிலொன்று இணைந்தவை.

பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் வெளிவந்த 13 ஆண்டுகளுக்குப்பின்னரே மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை நூல்வடிவில் பதிப்பாகியிருப்பினும் ஞானசாக்ரத்தில் முதன்முதலில் பின்னதன் கட்டுரைகளே முதலில் வெளிவந்தவை.நூலின் கருத்தமைப்பை நோக்கினாலும் பின்னதற்குப்பின்னரே முதன்மைவைத்து நோக்கத்தக்கது.

நீண்ட நாள் உயிர் வாழ்க்கை என்றொரு ஆங்கில நூல் உள்ளது. அதுதான் அடிகளார் மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை நூலை எழுத உந்தியுள்ளது. அதனை எழுதிய காப்டன் காடர்ட்டைமண்ட் ஒன்றேகால் நூற்றாண்டு (122ஆண்டுகள்) வாழ்ந்தவர்.இதனை எழுதிய அடிகளார்முக்கால் நூற்றாண்டை அணுகித்தான் வாழ்ந்தார். இது குறையாகாது. அடிகள்ார்க்கு அமைந்த பணிகள், பயணங்கள், சூழல்கள், குடும்ப இடையூறுகள். இயற்கை நிகழ்வுகள் அவர் கருதி எழுதியுள்ளபடி வாழ்வைக் கொண்டு செலுத்த இயலாமல் போயிருக்கலாம். இது நூலின் நிறைவை எவ்வகையிலும் திண்டாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/70&oldid=687138" இலிருந்து மீள்விக்கப்பட்டது