பக்கம்:தமிழ்மாலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

பாங்குடன் தமிழ்ப்பாடல்நுணுக்கங்களையும் சான்றாக்கியுள்ளார்.இருட்டறைச் சேர்க்கையை ஏற்காது வெளிச்சம் கூறுவதுடன் பஞ்சுநூல்கூட இடையில் தடையாக நிற்கக்கூடாத பாங்கையும் சிறப்பித்துள்ளார். ஆனால், தேரையல் என்னும் மருத்துவ வாழ்வியல் கோட்பாட்டுவித்தகர்'நமனார்க்கிங்கேதுகவை நாமிருக்கும் இடத்தே" என்று முடிவுகட்டும் பாடலில், வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பலவற்றைக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று "பகல் புனரோம்" என்பது.இதில் அடிகளார் மாறுபடுகிறார்.புணர்ச்சி இன்பத்தின் புதுமைத் துடிப்பின் வடிப்பு போலும் இது.

ஆனால், வாழ்வியலுக்கு ஊட்டமாகும் இந்நூற்போக்கில் குழுகாயச் சீர்திருத்தத்திற்கும் இருக்குமறை, உபநிடதங்கள், பிரமாணங்கள் முதலியவற்றிலிருந்து சான்றுகள் காட்டிச் சிறார் திருமணங்களுக்குச் சிறை வைக்கிறார்; மறுமணத்திற்கு மடை திறக்கிறார்; கைம்பெண் மணத்திற்குப் பைம்பொன் தாலி தருகிறார்.

பலபட நிறைவாகும் இந்நூலில் அவர் தம் கடைப்பிடி பல காட்டப்பட்டுள்ளன.அவற்றுள் ஒன்றுநாள்தோறும் மலம் கழிப்பது.மலங்கழிவது இயல்பு மலங்கழிப்பது ஒரு முயற்சி. இயல்புதான் உடலின் உள்ளியக்கத்திற்கு முறை அடிகளார் இயல்பானதைத்தம்நாட்பழக்கத்தில் அடையாமல், குதவாய் நீரேற்ற (எனிமா) வைக் கொண்டார். இதனை அனைவரும் கைக்கொள்ள அறிவுறுத்துவது ஏற்கவேண்டாத ஒன்று.

நிறைவாகச் சொன்னால் இந்நூல் நிறைவான நூலாகிறது. இந்நூற் கருத்துக்கள் மிகமிகப் பெரும்பாலானவை கடைப்பிடிக்க வேண்டியவை; கடைப்பிடிக்க கூடியவ்ை, கடைப்பிடிக்க எளிமையானவை, கவனந்தான் வேண்டும்.இன்னும்இன்றும் கொள்ளலாம் என்றும் எவரும் கடைபிடிக்கலாம். எவரும் நூறாண்டும் வாழலாம்.

தமிழைப் பொறுத்த அளவில் இந்நூல் முதல் நூல்; முதன்மையான நூலுமாகும். தமிழுலகமும் பிற குமுகாயங்களும் நன்றி படைக்கத் தகுதியுள்ளவை அடிகளார்தம் வாழ்வியல்நூல்கள்.

1. கோட்பாட்டியல் (4 நூல்கள்)

நூற்கருத்திற்கும் சொல்லிற்கும் கொள்ளப்படும் கருத்து இருவகை எனலாம். ஒன்று அறிவுசார்ந்த உள்ளுணர்வு மற்றொன்று உண்மைச்சார்ந்தமெய் சார்ந்த உள்ளுணர்வு.இரண்டாவதை மெய்யுணர்வு என்பர். இது உள் கருத்தின் உண்மையைக் கொள்ளும் முறை. கொள்ளும் முறையாகையால் மெய்க்கோட்பாடு என்று.இதனைக்குறிக்கலாம். சற்றுச் சுருக்கமாக இதனைக் கோட்பாடு என்கிறோம். ஆங்கிலத்தில் ஃபிலாசபி எனப்படுகின்றது. வடசொல்லாக்கத் தத்துவம் என்று உள்ளது. இவ்வகையான கோட்பாட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/72&oldid=687140" இலிருந்து மீள்விக்கப்பட்டது