பக்கம்:தமிழ்மாலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69

அங்கு முல்லைப் பாட்டு பாடமாக இருந்தது. அதை நடத்தும் போது நச்சினார்க்கினியர் உரையால் நேர்ந்த மயக்கங்கள்தாம்புத்துரை ஆராய்ச்சிப் பாங்கில் எழுதவேண்டும் என்னும் உந்துதலை ஏற்படுத்தியது. அவ்வாறே இதற்கும் அடுத்துப் பட்டினப்பாலைக்கும் ஆராய்ச்சியுடன் கூடிய உரை வகுத்தார்.பயின்ற கல்லூரிமாணவர்களே பொருள் திரட்டிஇவற்றை வெளியிட வழங்கியமை ஒரு புதுமை, -

இவ்வுரைப்பாங்கு குறிக்கத்தக்கது. பாட்டைக் கொடுத்துப் பொருள் தருவது என்னும்போக்கிலிருந்துமாறிமுதலில்பாட்டின் இயல்பைக்கூறிநூலை அறிமுகப்படுத்திப் பின்னர் பாட்டைக் காட்டி, அடுத்துப் பாட்டில் அமைந்த பொருளை வகை வகையாகப் பாகுபடுத்திப் பொருட்பாகுபாடு என்று

தலைப்பிட்டு விளக்கி, அதிலும் கருத்தடுக்குகளுக்கேற்ப வகைப்பாகுபாடு

செய்து விளக்கந்தரப்பெற்றது.தொடர்ந்து திணை விளக்கம்,பாட்டின் வரலாறு, ஆக்கியோன் வரலாறு,பாட்டுடைத் தலைவன்,பாட்டின்நலம் வியத்தல்,பழைய வழக்க ஒழுக்க வரலாறு கூறல், பாவும் பாட்டின் நடையும் இவற்றிற்குப் பின், விளக்க உரைக் குறிப்புக்கள், இறுதியாக அருஞ்சொற்பொருள் அகரவரிசை என்று இவ்வாராய்ச்சியுரை நிறைவேறுகிறது. - . .

நச்சினார்க்கினியர் சிறந்த உரையறிஞர் எனினும் நீண்ட செய்யுள்களுக்கு உரை எழுதும்போது ஆற்றொழுக்காக உரை தராமல் நூறாம்.அடியிலிருந்து ஒன்பதாம் அடியில் உள்ள தொடருக்குச் சொல்லைக் கொணர்ந்து மாட்டி ஏற்றிப் பொருள் எழுதுவார். இது எங்கோ உள்ள சொல்லை எட்டிப்பிடித்து மாட்டி ஏற்றுவதால் மாட்டேறு எனப் பெற்றது. இந்த வலிந்த முறையால் மாணவர்கட்கு மயக்கம் நேரலையும் நூலாசிரியரின் திறத்தில் குறை ஏற்படுவதையும் கண்ட அடிகளார். இம்முறையை விடுத்து எழுதினார். -

பாடலை அதனை எழுதிய ஆசிரியனது வாழ்வுடன் இணைத்துப் பொருள்கானும் முறை ஒன்றையும் கையாண்டார். பட்டினப்பாலையை அகப்பொருளும் புறப்பொருளும் இணைந்த இலக்கியமாகக்காட்டினார். பாலை அகம் என்றார்; பட்டினம் புறம் என்றார். பாலை என்னும் அகத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்கிறான். செல்பவன் பாலைநிலத்தின் வெம்மையைப் பேசுவது அகப்பொருள்துறை. அதற்கு உவமையாக,

"திருமாவளவன் தெவ்வர்க்கோச்சிய வேலினும் வெய்ய கானம்'

என்று கரிகாலன் போர்வேலைக் கூறியது புறம்பொருள் துறை.இதுபோன்றே, தம் காதலியின் தோள் இனிமையாம்அகப்பொருளை,

“அவன் கோலினும் இனிய தடமென் தோளே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/76&oldid=687144" இலிருந்து மீள்விக்கப்பட்டது