பக்கம்:தமிழ்மாலை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ァ」

எழுதப் புகுந்தார். 1920-இல் தொடங்கி ஒராண்டு உரை இதழில் வெளிவந்தது. பின்னர் நேர்ந்த பிணக்கால் உரை நின்றது. திருவாசகத்தில் முதல் நான்கு பகுதிகளாகிய, சிவபுராணம், கீர்த்தித்திருவகவல்,திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நெடிய அகவல்களுக்கும் உரைவகுத்தார்.நெறிவழங்கும் இவ்வுரை பற்றி ஒன்றை எழுதுவதே அதன்நிறை பெருமையைக் காட்டுவதாகும். திருவாகத்திற்குப்பண்டிதமணிகதிரேசனார் உரை எழுதியுள்ளார்கள். அவர்கள் திருச்சதகம் முதலே உரைவகுத்துள்ளார்கள்.அதற்குஅவர்கள் கூறிய காரணம்: --

"நான் திருவாசகத்தில் முதல் நான்கு அகவல்களுக்கு உரை எழுதவில்லை; திருச்சதகத்திற்கே எழுதினேன். காரணம் மறைமலையடிகளார் அந்நான்கிற்கும் உரை எழுதிய பின்னர் அதற்கீடான உரை வருதல் அரிது என்பதை உணர்ந்தேன். அடிகளைப் போல் அரிய உரை யாராலும் எழுத முடியாது”

இத்துணைச் சிறப்புடைய உரைநூல்வடிவாக 1948-இல் வெளிவந்தது.உரைக்கு மறுப்பும் எழுந்தது. அஃதும் மறுக்கப் பெற்றது.

அடிகளார். சென்னையில் நிலைத்த வாழ்க்கையைத் துவங்குதற்கு முன்னர்திருநல்லுசாமிபிள்ளை அவர்கள்.விருப்பின்பேரில் அவர்தம் சிற்றுாரில் தங்கினார்.பிள்ளையவர்கள் நடத்திய இதழ்ாகிய சித்தாந்ததீபிகைக்கு முதலில் ஆசிரியராயிருந்தபோது அதில் திருமந்திரத்தில் மூன்று இயல்கள், சிவஞான சித்தியாரில் 14 செய்யுட்கள்,தாயுமானவரின் பரிபூராணாந்தபோதம்,பொருள் விளக்கம் முதலியவற்றிற்கும் விளக்க உரை எழுதின்ார்.இவைநூல்களாகாமல் போயின. .

உரையுலகில் அடிகளார் பத்துப்பாட்டு தொடங்கித் தாயுமானவர் வரை பல்வகை நூல்களுக்கும் சைவசித்தாந்தக் கோட்பாட்டில் நீங்காமல் நின்று உரைகளில் கலங்கரை விளக்கங்களைத்தந்துள்ளார். - உரைகாணும்நோக்கில்செய்யுள்களில்தோய்ந்தஅடிகளார்செய்யுளைத்

தாமே படைக்கும் உந்துதலையும்பெற்றார். -

3. பாடலியல் (20 நூல்கள்)

பாட்டு என்றால் எத்தகையது? எவ்வாறு அமைய வேண்டும்? என்னென்ன நிறைந்திருக்க வேண்டும்? அடிகளாரே இவற்றிற்கெல்லாம் விளக்கந்தந்துள்ளார்.

"வாட்டம் இல் சிறப்பில் பாட்டெனப்படுவது என்று தொடங்கி அவர் காட்டியுள்ள பாட்டின் எழிற்கோலம் இவை: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/78&oldid=687146" இலிருந்து மீள்விக்கப்பட்டது