பக்கம்:தமிழ்மாலை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

தேவாரத்திலும் தொடங்கியது. அவை போன்றே அவர் முதலில் வடித்த பாடல்களும் அமைந்தன. .

இலங்கை மன்னாரில் உள்ள சித்திவிநாயகர் மீது ஒரு பதிகம்பாடினார். அது ஞானசம்பந்தர் பாடல் போன்றமைந்தது. ஞானசம்பந்தர் தம் பதிகங்களில் பதினோராவது கடை காப்புப் பாடலில்தம் பெயரை அமைத்து, -

“காழியுள் ஞான சம்பந்தன் அளிதருபாடல் பத்தும் வல்லார்கள் அமரலோகத் திருப்பாரே' என்று பாடுவது போன்று அடிகளாரும், - . . .

"தமிழார் ஊரிற் சான்றவன் வேதா சலன்சொன்ன அமிழ்தார் பத்தும் கற்பவர் நற்பால் அடைவாரே” என்று பாடினார்.அப்பர்பாடல் போன்று திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை மணிவாசகரின் திருச்சதகவிருத்தங்களின் நிழல்கள் அடிகளார் பாடல்களில் நிழலிடுகின்றன.அனைத்துவகையாப்பிலும் பாடல்கள் வடித்துள்ள அடிகளார்.

“இன்றிருக்கும் ஒரறிஞன் நேற்றிருந்த தன்றியே பின்னைநாளுமிருத்தல் பேசு” என்பது போன்ற குறட்பா பத்தும் வாழ்க்கைக் குறள் என்னும் தலைப்பில் தந்துள்ளார்.

பல்வகை யாப்பில் பாடியமை போன்றே பல்வகைக் கருத்துக்களிலும் பாடல்கள் பாடினார். அவர்தம் பாடல்கள் இறைவணக்கப் பாடல்கள், மொழி பற்றிய பாடல்கள், இயற்கை பற்றியவை, இரங்கல் பாடல்கள், வாழ்வியல் பாடல்கள், நாட்டியல் பாடல்கள், மொழிபெயர்ப்புப் பாடல்கள் என்றெல்லாம் அமைகின்றன. தமிழ்மொழி வாழ்ந்ததாக,

"வடமொழி யென்னும் மடங்கெழு தோழியொடு முடம்படுத் தொருங்கு விடுப்பக் குடம்புரை கொங்கைப் பொறைகெழு கொழுந்தமிழ் மங்கை என்றபாடியவர் இந்தியத்தாயை,

“உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்க்கோர் உயிரனையாய் பலவாறு நின்புகழைப் பாரித்தேன் சிற்றறிவால் சொலவருமோ தொலையாத வளமுடையாய் தொன்றுதொட்ட நலமெல்லாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே"

  • 595

என்று பாடினார். அதில் தலைப்பாகத் தமிழை இந்தியாவிற்கு அடை மொழியாக்கித் "தமிழிந்தியத் தாய்' என்று பெயரிட்டமை அவர் தம் பரந்த உள்ளத்தைப் புலப்படுத்துகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/80&oldid=687148" இலிருந்து மீள்விக்கப்பட்டது