பக்கம்:தமிழ்மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

குறைபட நேர்ந்தபோது ஊன்றி நின்று குரல் கொடுத்து நிலைநாட்டியவர். மறைமலையடிகளாரின் முழு உருவ வெண்கலச்சிலையைநாகைநகரில் திறந்து வைத்துப் பெருமை கூட்டிய தமிழக முதல்வர். அவ்விழாவில் மலர்ந்த மறைமலையடிகளார் நினைவுமலரில் "மறத்தமிழ் மாண்பினர் மறைமலையடிகளார்’ என்னும் கட்டுரை படைத்துப் புகழ் சேர்த்தவர். இவற்றையெல்லாம் நினைவுகூரும் வகையில் இவ்வறக்கட்டளையின் இப்பொழிவிற்கு அக்கட்டுரையில் அவர் மறைமலையடிகளார்க்குச் சூட்டிய புகழ்த் தொடராகிய தமிழ்க்கென வாழ்ந்த தமிழ் மாமலை என்பதைத் தலைப்பாக்கி மகிழ்கின்றேன். இந்நேரத்தில் இஃது அவர்க்குக் கூறும் பாராட்டும்.நன்றியும் ஆகும். -

நயப்பும் வியப்பும் தரும் ஒரு பொருத்தத்தை இங்கு குறிக்கலாம். தொடங்கிய பாவேந்தர் பாட்டியல் அடிகளால் முழங்கிய புலவனை முத்தமிழ் அறிஞனை என்று முத்தமிழ் அறிஞராகப்பட்டம் சூட்டினார்.இதனை நினைவிற் கொள்ளமுடியாத இந்தியப்பெருநாட்டின் குடியரசுத்தலைவர், மறைமலையடிகள் அறக்கட்டளை அமைத்தவர்க்கு முத்தமிழ் அறிஞர் என்று விருது சேர்த்தமை வியப்பிற்குரியதே. அதனையும் இராசராசன் விருது வழங்கிய விழாவில் இதே தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் சூட்டியமை நயத்தற்குரியதே. இவ்வறக்கட்டளையைத் தாங்கிப் பதிந்து விளக்கும் தமிழ்ப் பல்கலைக்கழகம் வளர்க, வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.

விளங்கவைக்க வேண்டிய இவ்வறக்கட்டளையைப் போற்றி செயற்படுத்த முனைப்புற்ற தமிழ் நெஞ்சத்தர், துணைவேந்தர் முனைவர் அவ்வை நடராசன் அவர்களை உவக்கும் உள்ளத்தில் அமர்த்திப் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். இன்று நிகழ்ச்சியாக்கி நடைமுறைப்படுத்தும் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையினருக்கு என் பாராட்டும் நன்றியும் அணியாகுக: இன்னோர் அனைவரையும் வருகை தந்து மகிழ்விக்கும் மன்றத்தாரையும் வணங்கி மகிழ்கின்றேன்.

அ. மலையின் முகடுகள் முன்று

இப்பொழிவின் தொடக்கமான பாவேந்தர் பாரதிதாசனார் பாடல் நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளாரின் ஆய்வுச் சிறப்பை, திறத்தை அறிமுகப்படுத்துகின்றது. அதன் உள்ளீடாக ஒலிப்பது அடிகளாரின் ஆய்வுத்திறன் மட்டுமன்று, தமிழின உணர்வையும் தழுவிக்காட்டுகிறது.

இவ்வுணர்வு அடிகளாரின் தமிழின ஊற்றம். ஆம் தமிழ் இன ஊற்றம்!

இத்தமிழின ஊற்றத்தை அறிமுகப்படுத்தியது கவிஞருலகில் வீறு பெற்ற ஆண்மகனின் குரல், மற்றோர் கவிக்குரல் இப்படி ஒலிக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/9&oldid=687069" இலிருந்து மீள்விக்கப்பட்டது