பக்கம்:தமிழ்மாலை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

மற்றும் யானைமுகக் கடவுளை நம் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரு நூல்களிலும் பாடாமை ஒரு சான்றாகியுள்ளது. அப்படி பாடிய,

“நரியைக் குதிரை செய்வானும்”

"குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்” “நரியினார் பரியா மகிழ்கின்றதார்?"

என்னும் தொடர்களும், மணியார் வைகைத்திருக்கோட்டில் நின்றதோர்திறம்" என்று மணிவாசகர்க்காகச் சிவபெருமான் வைகைக் கரையடைக்க அதன் கரையில் மண்கொட்டிய செயற்குறிப்பும் அடிகளார்க்கு வன்மையான சான்றுகளாயின. இவற்றிற்கெல்லாம் வேறு பொருள் கூறியோரைத் தக்க வன்மையான சான்றுகளுடன் மறுத்துள்ளார்.

மணிவாசகர் அமைச்சராயிருந்த அவையின் மன்னன் வரகுண பாண்டியன் கி.பி. மூன்றாம் நூற்றாண்டினன் என்று நிறுவியுள்ளார். இதற்கு விளக்கம் கூறுபவர்.

“உள்ளது கூறும் பாரதக் கதை இல்லது கூறும் இராமன் கதை'

என்றுஇராமாயணம் கற்பனைக்கதை என்பதைத் தெளிவுபடவிளக்கியுள்ளார். இராமாயணக் கதை புத்தசாதகக் கதையைப் பின்பற்றி எழுந்ததென்றும், அதிலும் ஒரு கதையில் இராமன் தெற்கே வந்து இராவணனுடன் போரிட்டது கூறப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

முதல் மறையாகிய இருக்கு மறையில் ஒர் இயற்கை'அன்னையின் உருவகம் உண்டு. அதில் மழையின் தலைவனாகிய இந்திரன் இராமன் என்னும் சொல்லாகவும், உழும்போது உண்டாகும் சால்வழி சீதையாகவும் வண்ணனையாகக் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றார்.

மேலும் புத்தக்கதை ஒன்றில் தயரதனுக்கு இரண்டு மகனும் ஒரு மகளுமாக மூவர் மக்கள். இராமன், இலக்குவன், சீதை என்னும் மூவர் அவர். மூவரும் காட்டிற்குச் சென்றனர். அண்ணன் தங்கையாகக் காடு சென்றனர். மீளும் போது கணவன் மனைவியாக மீண்டனர் என்று காணமுடிகின்றது. இக்காலத்தில் இராமர் பிறந்த இடம் அயோத்தியில் உள்ளது. எந்த வரலாற்று ஆசிரியரும் ஒத்துக்கொள்ளாத ஒன்றிற்கு வரிந்து கட்டி பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நோக்கும்போது அருவெறுப்பான நகைப்பே தோன்றுகின்றது. மதவெறியால் நேர்ந்த புனைகதையால் விளைந்த கொலைக் கொடுமைகளையும் கான நேர்ந்தது. -

மிக நெடிய ஆய்வால் சில: கலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு

ετ ήττι γflm, τ%), στα τσι

. : .مشن مسلم شونين

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/90&oldid=687158" இலிருந்து மீள்விக்கப்பட்டது