பக்கம்:தமிழ்மாலை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

அறிதுயிலால் பல மறைபொருள்களை வெளிக்கொணரலாம். வசியம் என்னும் மனக்கவர்ச்சியால் பல்வகைக் குற்றவாளிகளைத் திருத்தலாம்.

மரணத்தின் பின் மனிதர் நிலையால் இறந்தோர் உயிர்களுடன் உரையாடலாம். இவை இந்நூ.ல்களின் உள்ளீடுகள்.

இந்நூல்கள் நான்கும் தமிழுக்குப்புதிய வரவுகள்.

9. குமுகாயவியல் (8 நூல்கள்)

"ஞானம் பொய்க்க நசிக்குமாம் சாதி, சாத்திரம் கண்டாய் சாதியின் உயிர்த்தலம்; சாத்திரம் இன்றேற் சாதி இல்லை, பொய்மைச் சாத்திரம் புகுந்திடில் மக்கள் பொய்யே யாகிப் புழுவென மடிவர்”

இது பாரதியின் அறிவிப்பு எச்சரிக்கையுமாகும். இப்பாதையிலேயே அடிகளார் குமுகாய எண்ணங்கள் நடந்தன. அடிகளார், “சாதிப் பேயை சாடும் வீரர்”. சைவப் பிடிப்புள்ளவரானாலும் சைவத்தில் புகுத்தப்பெற்ற உயர்வு தாழ்வு வேறுபாடுகளைச்சாடத்தவறாதவர். சாதிவேற்றுமையும்போலிச் சைவரும்' என்னும் நூல் இவ்வுண்மையையும் பகுத்தறிவையும் குழைத்துச் சமைக்கப்பட்டது.

'தொல்காப்பியர் காலத்தில் சாதி இல்லை, உயர்வு தாழ்வு இல்லை; தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறும் சாதி தொழில் பற்றியது என்று நிறுவியுள்ளார். ஒத்ததறியும் பண்புள்ள அடிகளார் வடமொழி நூல்களுடன் இயைந்து சென்று அவற்றிலிருந்து நற்கருத்துக்களைச் சான்றாகக் கொள்கின்றார்.வடமுதல்மறையாம் இருக்குமறையின் அதன்பத்தாம்மண்டிலம் வரை சாதி பற்றிய குறிப்பே இல்லை என்றும், சாதி உயர்வில் குறியீடாகக் கொள்ளப்பெறும் பூனூலணிவதும் பின்னர் கட்டிய சதபதப் பிரமாண்யத்தில்தான் உள்ளது' என்றும் கட்டிக்காட்டியுள்ளார். திருக்குறள் காட்டும்உயர்வுதாழ்வு வேறுபாடற்றதமிழ்வாழ்வைஆழமாக விளக்கியுள்ளார். மக்களைச் சமமாகநோக்கிய சைவத்தில் சாதிக் கருத்து வடமொழிப்புராணக் கருத்துக்களால் தமிழில் புகுத்தப்பெற்றதைக் கண்டிக்கிறார்.அதன்பின்னரும் சேக்கிழார் போன்றோர் சைவத்தில் சாதி வேறுபாட்டை நீக்கிக் காட்டவே இலக்கியம் வடித்ததைவிளக்கியுள்ளார். சோமாசி நாயனார் புராணத்தில் அவர் செய்யும்வேள்விக்குச்சிவன் சண்டாளப்பறையனாகவந்ததைக் காட்டுகின்றார். சைவரில் சாதித் திமிர் கொண்டவரால் மக்கள் குமுகாயம் தடம் புரண்டது. என்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/97&oldid=687165" இலிருந்து மீள்விக்கப்பட்டது