பக்கம்:தமிழ்மாலை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

ஒன்றுமற் றொன்றைப் பழிக்கும்- ஒன்றில்

உண்மையென் றதைமற் றொன்றுபொய் யென்னும் புராணங்கள் செய்தார்-அதில்

நல்ல கவிதை பலபல தந்தார்; கவிதை மிக நல்லதேனும்-அக்

கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்; புவிதனில் வாழ்நெறி காட்டி-நம்மை

போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்"

பாரதிக்கு இப்புதுமைக் கருத்து, அவர் தம் பட்டறிவால் பிற்காலத்தில் தோன்றியது. ஆனால், அடிகளார் தொடக்கக் காலத்திலேயே இப்புரட்சிக் கருத்தில் ஊன்றியவர்.

குமுகாய நலத்திற்கு அடிகளார் இப்புதுமையைப் பின்பற்றித் தந்துள்ள நூற்கருத்துக்கள் தமிழ் குமுகாயத்திற்கு மட்டுமின்றி மதப்பூசலை விளைவித்து அரசுக்கட்டிலைப்பிடிக்க முந்துவோர் அழிசெயலுக்கும் மருந்தாகும்.

'சீர்திருத்தக் குறிப்புகள் என்னும் சிறு வெளியீடு குமுகாயச் சீர்திருத்தங்களைக் குறிக்கிறது. இதுபோன்றே "1amilian and Aryan form of Marriage என்னும் ஆங்கில நூல் தமிழர் ஆரியர் மணமுறையை விளக்கித் தமிழ்மரபின் தூய்மையையும் நெறியையும் ஒளிரச் செய்கிறது. அடிகளார் குமுகாயக் கருத்துக்களால் ஒரு புதுமைப் புலவர் புரட்சிப் புலவர்.

10. புதினவியல் (2 நூல்கள்)

புதுமைப் புலவர் புதினப் புலவரானார். பூத்துத் தோன்றும் புதினக் கலைகளைப்புலவர்கள் கூர்ந்து கண்டுநூல்களைப்படைக்க வேண்டும்' என்று அறிவுறுத்தும் அடிகளார்.தாமேமுன்னோடியாகி இப்புதினக்கலையில்புகுந்தார்.

தமிழ்மண்ணில் கதை வடிப்புகள் இருந்தாலும் இஃதொரு தனிக்கலையாகப் பிறப்பெடுத்தது மேலை நாட்டில்தான். நாவல்' என்னும் இத்தாலியச் சொல்லிற்குப் புதுமை என்று பொருள். 17-ஆம் நூற்றாண்டின் இத்தாலி நாட்டு அறிஞர் தானியேல் தீபோ என்பார் இப்புதுமையை முதலில் படைத்தார்.இவரை இக்கலையின் தந்தை என்பர்.இக்கலையையே நாம் புதினம் என்று தமிழில் இப்போது வழங்குகின்றோம்.

அடிகளார் இப்படைப்பை வடிக்கவேண்டுமென்று முனைந்து இரண்டு நூல்களைப் படைத்துள்ளார். ஒன்று குமுதவல்லி அல்லது நாகநாட்டரசி என்ற ஆங்கிலப்புதினத்தின் தழுவல் இரெயினால்டு எழுதிய ஆங்கிலநாவல் இது. இது தம் கோட்பாடு கொள்கைகளைக் காட்டி எழுத வாய்ப்பாக இருந்ததை உணர்ந்து வடித்தார். தமிழர்தம் நீண்டகாலத் துயில் நீக்க இக்கலையில் எழுதுவதாகக் குறித்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/99&oldid=687167" இலிருந்து மீள்விக்கப்பட்டது