பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை-அ.-சீனிவாசன் ዝ09 குது.ாஹலமடைகின்றது. சூரியன் உதித்தவுடனே சேதனப் பிரகிருதி மட்டுமேயன்றி அசதேனப் பிரகிருதியும், புதிய ஜீவனையும் உல்சாகத்தையும் பெற்றுத் திகழ்கிறது. இவற்றினையொப்பவே நாட்டில் ஒர் புதிய ஆதர்சம் - ஒர் கிளர்ச்சி - ஓர் தர்மம் - ஓர் மார்க்கம் தோன்றுமேயானால் மேன் மக்களின் நெஞ்சமனைத்தும் இரவியை நோக்கித் திரும்புகின்றன. சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கும் மூலாதாரமாகிய தேசபக்தி” என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தையெல்லாம் உடனே புளகிதமாயின, நல்லோருடைய குணங்களிலே குறைவுடைய -வனாகிய யானும் தேவியினது கிருபையால், அப்புதிய சுடரிடத்து அன்பு பூண்டேன். அவ்வன்பு காரணமாகச் சென்ற வருடம் சில கவிதை மலர் புனைந்து மாதாவின் திருவடிக்குப் புனைந்தேன். "நான் எதிர் பார்த்திராத வண்ணமாக மெய்த் தொண்டர்கள் பலர் "இம்மலர்கள் மிக நல்லன” என்று பாராட்டி மகிழ்ச்சி தெரிவித்தார்கள். மாதாவும் அதனை அங்கீகாரம் செய்து கொண்டாள். இதனால் துணிவு மிகுதியுறப் பெற்றோனாகி மறுபடியும் தாயின் பாத மலர்க்கு சில புதிய மலர்களைக் கொணர்ந்திருக்கிறேன். இவை மாதாவின் திருவுள்ளத்திற்கு மகிழ்ச்சியளிக்குமென்றே நினைக்கிறேன். “குழலினிது யாழினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொற் கேளாதவர்'என்பது வேதமாதலின் என்று பொருள் பொதிந்த ஒரு முகவுரையை பாரதி எழுதியுள்ளார். இதில் அவருடைய தெளிவான உரைநடை வடிவத்தைக் காணலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையில் அதன் இயக்கத்திலும் அமைப்பு