பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2-மொழி-மொழிகளின்-தோற்றமும்-வளர்ச்சியம் 12 மனித ஆற்றலும் வளமும் மனிதனுடைய உழைப்பு சக்தியும் அறிவுத் திறனும் வளர்ச்சி பெற்றுப் புதிய கட்டங்களை எட்டியிருக்கிறது. இக்காலங்களில் பலவேறு இனக் கூட்டங்களில், பேச்சு மொழிகளும் இலக்கியங்களும் கவிதைகளும் பாடல்களும் இணைந்து வளர்ந்து நிலை பெற்றிருக்கின்றன. சேர்ந்தாற் போல கூடி வாழ்ந்த மக்கள் சமுதாயங்களில் மொழிகளும் வளர்ச்சி பெற்றுப் புதிய பரிமாணங்களில் விரிவடைந்து மொழிகளின் புதிய பல இலக்கியங்களும் இலக்கணங்களும் வளர்ச்சிபெற்று, அவற்றின் புதிய வரிவடிவங்களும், எழுத்து வடிவங்களும் தோன்றி நிலைபெற்றிருக்கின்றன. இலக்கிய இலக்கண வளர்ச்சிக்கு வெறும் மனப் பாடங்கள் போதவில்லை. எழுத்து வடிவங்கள் தேவைப்பட்டன. இலக்கியங்களும், இலக்கணங்களும், பாடல்களும், கவிதைகளும், எழுத்து வடிவங்களில் பதிவு செய்யப்பட வேண்டிய வளர்ச்சிக் கட்டம் உருவாகியது. அத்தகைய பண்டய கால சமுதாய முன்னேற்றங்களில் உலகில் நாகரிக வளர்ச்சியின் அடையாளங்களைப் பதித்திருந்த சமுதாயங்களில் பாரத சமுதாயம் பெரிதும் முன்னேறி வளமும் வளர்ச்சியும் பெற்றிருந்தது. அதன் முக்கிய பகுதியாக, அதன் முக்கிய அங்கமாகத் தமிழ் சமுதாயம் இடம் பெற்றிருந்திருக்கிறது. அதன் மொழியான தமிழ் மொழியும் புதிய சொல் வடிவங்களும் வரி வடிவங்களும் பெற்றுச் சிறப்பான இலக்கியங்களையும் ஆடல் பாடல்களையும் கூத்துகளையும் மற்றும் பல துறைக் கலைகளையும் வளர்த்திருக்கிறது. சிலப்பதிகாரக் காப்பியத்தில் மூன்று தமிழ் நாடுகளையும் தமிழ்ச் சமுதாயத்தின் பலதுறை வளர்ச்சியைப் பற்றி அறியமுடிகிறது. நகரங்களின் வளர்ச்சி, துறைமுகங்கள்,