பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. எழுத்தும் சொல்லும் 25 இராமனைப் பற்றிக் குறிப்பிடும் போது "அறிவின் உம்பரான்” என்றும், “தன்புகழ் தன்னிலும் பெரிய தன்மையான்” என்றும் “கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான்” என்றும் "ஏதமில் அறத்துறை நிறுத்திய இராமன்” என்றும், "வேதமும் அறனும் சொல்லும் மெய்யற மூர்த்தி வில்லோன்,” என்றும் “மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஒர் மும்மைத்து ஆயகாலமும் கணக்கும் நீத்த காரணன்" என்றும், “முற்றிய பொருட்கெல்லாம் முடிவுளான்” என்றும், "அறம் வளர்க்கும் கண்ணாளன்” என்றெல்லாம் கம்பன் தனது சொல் குறிகளால் காட்டுகிறான். இந்தச் சொற்கள் எல்லாம் ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகும். இவையெல்லாம் தமிழ்மொழியை செழுமைப் படுத்துகின்றன. இவையெல்லாம் தமிழ் மொழியை மேலும் வளப்படுத்திப் பிரபலப் படுத்தியிருக்கிறது. இன்னும், பரதனைப் பற்றிக் குறிப்பிடும் போது, கம்பன், “செம்மையின் ஆணி’ என்று கூறுகிறார். அது ஒரு அருமையான கருத்துக் செறிவுமிக்க சொற்றொடராகும். நன்கு விளைந்த கட்டியான முத்தை ஆணிமுத்து என்று குறிப்பிடுகிறார்கள். தேக்குமரம், வேப்பமரம், மருதமரம் முதலிய மரங்களின் வைரம் மிகவும் வலுவானது. நெஞ்சுரம் மிக்க ஒரு மனிதனை வைரம் போன்ற நெஞ்சுறுதி உள்ளவன் என்றும் உறுதிக்கு வைரம் ஒப்பீடாகிறது. வண்டிக்கு அச்சாணி அவசியம். அந்த அச்சாணி செம்மையாகவும், உறுதி மிக்கதாகவும் இருந்தால் அது அந்த வண்டியின் தொடர்ச்சியான ஒட்டத்திற்கு ஆதாரமாக இருக்கும். செம்மையே சீரானது தான். எந்த ஒரு பொருளையும் செம்மைப் படுத்துவது என்பது நன்கு சீராக்குவது என்பதாகும். ஒருமாங்கொட்டையை உள்ளே பிரித்து முகர்ந்தால் அதில் ஒரு மணம் இருக்கிறது. அந்த மணம் மா மணமாகும். அந்த மணம் அந்த விதையின் முளையின் சாரமாக அமைந்துள்ளது.