பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. πΨέφιά சொல்லும் 32 அமைதி நிறைகுடம்) அறிவு, கல்லாத கலை (பொது அறிவு) வேதக்கடல் ஆகிய அனைத்தும் அடங்கும். “சொல்லின் செல்வன்' என்பதில் சொற்களின் வளம், செல்வம், ஆகியவைகளும் அடங்கியிருக்கின்றன. இன்னும் மாருதியைப் பற்றி "தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்றும் நீதி நலத்தின் வினை ஒர்வான் என்றும் “ வினைப் பகையை வென்றான்” என்றும் " ஊழிதோறும் உயர்வுறும் கீர்த்தியான்” என்றும் "வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழொடும் ஓங்கி நிற்பான்” என்றெல்லாம் கம்பன் குறிப்பிடுகிறார். வாலிக்கும் இராமனுக்குமிடையில் நடைபெறும் உரையாடல் கம்பனுடைய காவியத்தில் மிகச் சிறந்த காட்சியாக அமைந்திருக்கிறது. சிறந்த தமிழ்ச் சொற்களும் கருத்துக்களும் கருத்து வடிவங்களும் நிறைந்திருக்கின்றன. வாலியும் சுக்கிரீவனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டதைக் குறிப்பிடும்போது, உந்துவர், உதைப்பர், எற்றுவர், கடிப்பர், நின்று இடிப்பர், மரத்தினால் அடித்து உரப்புவர், ஒறுக்குவர், தெளிப்பர், தீவிழிப்பர், என்றெல்லாம் கம்பர் குறிப்பிடுகிறார். வாலி மீது இராமன் தனது கணையை ஏவினான். வாலி சோர்ந்து வீழ்ந்தான். தன் மீது பாய்ந்திருந்த அம்பை இழுத்துப் பிடித்து அது யாருடையது என்று உற்றுப் பார்த்தான். அதில், “மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே