பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வளர்ச்சியில் பாதியின்_உருைடைஅ. சீனிவாசன் 37 போன்றது. அமைச்சர் சொல்வழி ஆற்றுதல், அன்பின் அல்லதோர் ஆக்கம் இல்லை. வையம் மன்னுயிர், அம்மன்னுயிர் தாங்கும் உடல் அன்னமன்னன். அவன் இனிய சொல்லினன், ஈகையன், எண்ணினன், வினையன், தூயன், விழுமியன், வென்றியன். நினையும் நீதிநெறி கடவான். சீலம் அல்லன. நீங்கினன், பொன் துலைத்தாலம் அன்ன தனி நிலை தாங்குதல் கொண்டவன். வாம மேகலை மங்கையரால் வரும் காமம் இல்லையெனில் கடும் கேடும் இல்லை என்று வசிட்டன் கூறியதைக் கம்பன் தமிழ் சொற்களில் எடுத்துக் கூறுகிறான். வாலி மாண்ட பின்னர், சுக்கிரீவன் கிட்கிந்தையின் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். இராமன் சுக்கிரீவனுக்குச் சில அரசியல் நல்லுரைகள் கூறுகிறான். அவைகளும் அரச நீதியின் பாற்பட்டதாகும். “வாய்மைசால் அறிவின் வாய்த்த மந்திர மாந்தரோடும், தீமை தீர் ஒழுக்கின் வந்த திரத் தொழில் மரவரோடும், தூய்மைசால் புணர்ச்சி பேணித்துகள் அறு தொழிலையாகிச், சேய்மையோடு அணிமையின்றித் தேவரின் தெரிய நிற்றி” 'புகையுடைத்து என்னில் உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்மிகை உடைத்து உலகம், நூலோர் வினையமும் வேண்டல் பாற்றே, பகை உடைச்சிந்தை யார்க்கும், பயன் உறுபண்பின் தீரா நகையுறு முகத்தையாகி, இன்உரை நல்குநாவால்.” “செய்வன செய்தல் யாண்டும் தீயன சிந்தியாமை, வைவன வந்தபோதும் வசையில இனிய கூறல் மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை, உய்வன வாக்கித் தம்மொடு உயர்வன உவந்து செய்வாய்”