பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில்-பாரதியின்-உரைநடை-அ.-சீனிவாசன் 47 அவைகளின் வளர்ச்சியும் விரிவாக்கமும், ஆடல் பாடல் இசை ஆகியவற்றின் வளர்ச்சி, மற்றும் பரிமாற்றங்கள், பரஸ்பரத் தொடர்புகள், முதலியவையெல்லாம் மொழிகளின் சொல்வளப் பெருக்கத்திற்கு உதவியாக இருந்துள்ளன. அந்த வகையில் தமிழ்மொழியும் இடம் காலம் சூழ்நிலைகள் சமுதாய வளர்ச்சி ஆகியவைகளின் மத்தியில் சிறந்த முறையில் சொல்வளம் பெற்றுத் தனது வலுவை வைரத் தன்மையை பலப்படுத்தியிருக்கிறது. அவைகள் மூலம் தமிழ் மொழியின் அடித்தளமும் மேல்கட்டுமானங்களும் மேலும் பலப்பட்டு விரிவடைந்துள்ளன.