பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உரைநடை காலத்தின் தொடக்கம் 50 வாழ்க்கையின் இதர பல்வேறு துறைகளிலும் ஒரு புதிய நாகரிகம், ஐரோப்பிய நாகரிகம் ஆகியவை உலகம் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நவீன ஐரோப்பிய மொழிகளான ஆங்கிலம் பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் மொழிகளும் அவைகளின் நவீன இலக்கியங்களும் பரவியன. இந்த ஐரோப்பிய மொழி வழியிலான ஐரோப்பியக் கல்வி முறையும் பரவியது. இந்திய நாட்டில் ஆங்கிலக் கல்வி முறை பரவியது. ஆங்கிலக் கல்வி படித்தவர்களிடம் ஆங்கில இலக்கியங்களும் ஆங்கில உரைநடையும் பேச்சுநடையும் மொழிநடையும் ஆங்கில நாகரிகமும் பரவியது.