பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அருள் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் -4 6. அருள் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் தமிழ் மொழி மட்டுமே நன்கறிந்தவர். அவர் வாழ்ந்த காலம், தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் சகல துறைகளிலும் வலுவாக நிலை பெற்று ஆட்சியில் இருந்த காலம். ஆங்கிலேயர்களுடைய ஆட்சியின் தலைமை நகரமாக தெற்கில் சென்னை நகரம் இருந்தது. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் சென்னையிலும் பல ஆண்டுகள் வசித்து ஆங்கிலேயர் ஆட்சியை நேரடியாகக் கண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதிலும், தமிழ் நாட்டிலும் பாரத நாட்டின் தென் பகுதியிலும் ஆங்கிலேயர்கள் பல ஆக்கிர -மிப்புப் போர்களை நடத்தி இப்பகுதி மக்கள் கடுமையான துன்ப துயரங்களுக்குள்ளாகியிருந்தார்கள். கருணையில்லாத ஆட்சி கடுகி ஒழிக. என்று அமைதியின் சின்னமான வள்ளலாரே பொங்கி எழுந்து கூறும் அளவிற்கு ஆங்கிலேயர்கள் கொடுங்கோலாட்சி நடந்து கொண்டிருந்தது. ஆங்கிலேயர்களின் படைகள் பிரஞ்சுப்படைகள், மைசூர் நாட்டின் ஹைதர் அலி திப்பு சுல்தான் படைகள், ஆர்க்காட்டு நவாபின் படைகள், பாளையக்காரர்கள் வீரமிகு ஆயுதப் போராட்டங்கள், முதலியவற்றால் பல போர்களும் போர் நாசங்களும், அழிவுகளும் ஏற்பட்டிருந்தன. அன்னியப்படைகளும் (பிரிட்டிஷ், பிரஞ்சு படைகள்) நவாபின் படைகளும் மக்களைச் சூறையாடியும் பலகொடுமைகள் நடத்தியும் பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது. ஆடுமாடுகளையெல்லாம் அன்னியப் படைகளும் நவாபின் படைகளும் கொன்று தின்று தீர்த்தனர். அதனால் கிராமங்களில் சாகுபடியே நடைபெற முடியாமல் மக்கள் பசி பட்டினியால் செத்து மடிந்தனர். இந்தப் பகுதியில் வளர்ச்சியடைந்திருந்த நெசவுத்