பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அருள் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் 58 அறிய வேண்டும்” என்று குறிப்பிடுகிறார். இந்த உரைநடையில் நல்ல தமிழும் தமிழ்த் துடிப்பும் இருப்பதைக் காண்கிறோம். வள்ளலார் சுவாமிகள் புராணச் சொற்பொழிவுகள் நடத்தி அனுபவப் பட்டவர், அவருடைய உரைநடையில் துடிப்பும், வேகமும் இருப்பதைக் காண முடிகிறது. ஜீவகாருண்ய ஒழுக்கம் இரண்டாம் பிரிவில், “மனிதப் பிறப்பில் தேகத்திலும், கரணங்களிலும், புவனத்திலும் போகங்களிலும், குறைவின்றி நல்ல அறிவுள்ளவர்களாய் பசி, பிணி, கொலை முதலிய தடைகள் இல்லாமல், உறவினர், சிநேகர், அயலார், முதலியருந்தழுவ, சந்ததி விளங்கத்தக்க சற்குணமுள்ள மனைவியோடு விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்றறிய வேண்டும்” என்றும், "அன்பு, தயை, ஒழுக்கம், அடக்கம், பொறுமை, வாய்மை, தூய்மை முதலிய சுபகுணங்களைப் பெற்று, விடய இன்பங்களை வருந்தி முயன்று அனுபவித்துப் புகழ் பட வாழலென்று அறிய வேண்டும்” என்றும், “ பசி, கொலை, பிணி, ஆபத்து, தாகம், பயம், இன்மை, இச்சை இவைகளால் ஜீவர்கள் துக்கத்தை அனுபவிக்கக் கண்ட போதும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்றறிய வேண்டும்” என்றும் கருணை மிக்க வள்ளலார் சுவாமிகள் கூறுகிறார். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்றாம் பிரிவில் ஜீவஒழுக்கம் என்னும் தலைப்பில், "ஆண்மக்கள், பெண்மக்கள், முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி, சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திர சம்பந்தம், தேச மார்க்கம், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் பேதம் நீங்கி எல்லோரும் தம்மவர்களாய்